பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

பரம்பரையாச்சே! உனக்கென்ன குறை!—என்று நையாண்டி பேசுகிறார்.

நையாண்டி பேசட்டும், தம்பி, தாராளமாகப் பேசட்டும், பேசுவதற்காகவேனும், தமிழரின் வரலாற்றுத் துணுக்குகளைக் கேட்டுப் பெறட்டும்—அவை உள்ளத்திலே வந்து புகப்புக, நையாண்டி பேசும் போக்கே கூட மாறிவிடக்கூடும்.

“அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்?

இந்த மாநிலம் முழுதாண்டிருந்தார்

இணையின்றி வாழ்ந்தார் தமிழ் நாட்டு வேந்தர்”

என்று பண்பாடத் தோன்றும், தமிழகத்தின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை உடைத்திடாமல், இந்தத் தடந்தோள்கள் எதற்கு என்று கேட்டிடும் ஆற்றல் எழும், தமிழ் அரசு அமையும்!

அந்த நன்னாளைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடனேயே, நக்கீரர் காதை காட்டி நையாண்டி செய்யும் காமராஜரை நாம் சகித்துக் கொள்கிறோம்.


14–10–1956

அன்பன்,
அண்ணாதுரை