பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கடிதம்: 63


"மிருக ஆட்சி..."

தேர்தலும் காங்கிரசும்—
“விடுதலை”யும் காமராசரும்—
காங்கிரசாட்சியின் கொடுமை.


தம்பி !

போஸ்டர் வேண்டுமா, போஸ்டர்! கண்ணைக் கவரும், கருத்தைக் கிளறும்! காங்கிரஸ் ஒழிப்பிலே கவலைகொண்ட பெரியவர்களே! இளைஞர்களே! போஸ்டர் தயாரித்திருக்கிறோம். ‘காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்’ என்று அழகாக அச்சடிக்கப்பட்ட போஸ்டர் — இலட்சக் கணக்கிலே உள்ளன—அடக்க விலை—ஆதாயம் கருதிப் போடப்பட்டதல்ல - வியாபார நோக்கத்துடன் வெளியிடப்பட்டதல்ல—நாட்டைக் கேடர்களிடமிருந்து மீட்டிட நல்லறிவுப் பிரசாரம் நடாத்துவதற்காகவே, பொருள் நட்டம், நேரக்கேடு, எதனையும் பொருட்படுத்தாது, இதனை வெளியிடுகிறோம்.

ஆயிரக் கணக்கிலே வாங்குங்கள்—விலை மலிவு - பல்லாயிரக் கணக்கிலே வாங்குங்கள்—பட்டி தொட்டிகளிலுள்ளோரும் வாங்குங்கள்—வீடுதோறும் ஒட்டிவையுங்கள்—ஓட்டு கேட்க வரும் காங்கிரசாரை ஓட்டுங்கள்.

காங்கிரசார் கண்களிலே, எந்தப்பக்கம் திரும்பினாலும் இந்தப் போஸ்டர்கள் படவேண்டும்—நாடே நமக்கு விரோத-