பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

பிறகு, அவர், மெள்ளப் பேசலானார்—எனக்கு, அவருக்குக் களைப்பு மேலிட்டுவிடுமே என்று பயமாக இருந்தது; அவரோ, தமக்கு ‘முடிவு’ விரைவிலே இருக்கிறது என்ற எண்ணத்தினாலோ என்னவோ, என்னிடம் பேசவேண்டியதைப் பேசிவிடவேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டவர் போலப் பேசினார்.

எல்லையை வாங்க முடியாதா?

இதில் என்ன கஷ்டம்?

இதய சுத்தியோடு இரண்டு மணி நேரம் ஆந்திர சர்க்காருடன் பேசினால், காரியம் நடக்காதா...?

என்று கேட்டார்...பதில் நானா கூறவேண்டும்...நாடு அல்லவா அந்த நல்லவரின் கேள்விக்குப் பதில் அளிக்கவேண்டும்.

கவர்னருக்கு ஏன் இலட்ச இலட்சமாகச் சம்பளம்? ஒரு வடநாட்டான்...நீங்கள் கண்டித்தீர்கள்...நியாயம்...ஏன், வீண் செலவு...என்ன பிரமாதமான வேலையாம், கவர்னருக்கு...காலணா செலவில்லாமல், கச்சிதமாக எங்கள் வி. வி. சண்முகநாடார் பார்ப்பாரே, இந்தக் கவர்னர் வேலையை...

என்று, அவர் கூறியபோது, நான் உருகிப்போனேன்.

சங்கரலிங்கனார், காங்கிரஸ்காரர்—என்றாலும், காரியமாற்றும் ஆற்றல் கொண்டவர் வி. வி. சண்முகம், எனவே அவர் காங்கிரஸ்காரராக இல்லாதுபோயினும் பரவாயில்லை, என்று எண்ணிய அரசியல் கண்ணியம் என்னை உருகச்செய்தது.

எனக்கு அவர், பேசப்பேச, நாம் அவருக்கு மெத்தச் சங்கடம் தருகிறோமே, என்ற பயமே மேலிடத் தொடங்கிற்று. அவரோ பேசுவதையும் நிறுத்திக்கொள்ளவில்லை, என் கரங்களையும் விடவில்லை.

இந்த அளவுக்கு அவர் பேசினதாலேதான், நான், அவர் உயிருக்கு ஆபத்து இராது, என்றுகூட எண்ணிக்கொள்ள நேரிட்டது.

காமராஜர் வரப்போகிறார், இரண்டோர் நாட்களில் என்று நான் கேள்விப்பட்டதால், ஒரு தைரியம் கொண்டிருந்தேன்—காமராஜர், கனிவு காட்டுவார், கோரிக்கைகளிலே சிலவற்றையாவது நிறைவேற்றிவைத்து, அந்தக்