பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கடிதம்: 71

நாமாவது.......!

மத்திய அரசை மைசூர் கண்டிப்பு—தியாகி, கித்வாய் அமைச்சர் ஆனமை—கட்டாய இந்தி.

தம்பி!

எடுத்ததற்கெல்லாம் டில்லி அதிகாரத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பது என்றால், இங்கு நமக்கு ராஜ்யத்தில் பாராளும் மன்றம் என்ற ஒன்று எதற்கு? என்று கேட்கிறார், அனுமந்தய்யா, முன்னாள் முதலமைச்சர்.

மைசூர் ராஜ்யம், தமிழகத்தைக் காட்டிலும் தொழில்துறையில் வளம் பெற்றது; என்றாலும், அங்குகூட, வடநாட்டு வளம் ஓங்கி வளருகிறது, தென்னகம் தேய்கிறது என்ற எண்ணமும், வடநாட்டின் அதிகாரத்துக்குத் தலையாட்டும் நிலைமைக்குத்தான், இங்கு ‘ராஜ்யங்கள்’ ஆக்கப்பட்டுள்ளன என்ற எரிச்சலும் இருக்கத்தான் செய்கிறது. அனுமந்தய்யா, இந்த எரிச்சலை வெளியிட்டிருப்பது இது முதல் முறை அல்ல. பதவி பறிபோய்விட்ட ஆத்திரத்தில் இது போலப் பேசுகிறார் என்று அலட்சியமாகக்கூறி, உண்மையை மறைத்து விடலாம் என்று சில காங்கிரஸ்காரருக்கு எண்ணம் ஏற்படும்—ஆனால், அனுமந்தைய்யா இப்போது மட்டுமல்ல, மைசூர் ராஜ்யத்தின் முதல்அமைச்சராக இருந்த நாட்களிலேயே கூட, மத்திய சர்க்காரின் ஆதிக்கத்தைக் குறித்துத் தமது கண்டனத்தை