பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

கண்ணியவான்கள், ஓமந்தூரார் போன்ற உத்தமர்கள் இருந்தாலும் கவலைப்படுவதற்கில்லை, அந்த ‘ஸ்தாபனம்’ ஒழிக்கப்பட்டாக வேண்டியது மிக மிக அவசரமான கடமை, அதிலிருந்தும், அணுவளவும் பிசகுவது கூடாது, அச்சம், தயை தாட்சணியம் — முன் பின் தொடர்பு எதுவும் குறுக்கிடக் கூடாது என்று வீராவேசமாகத் திராவிடர் கழகம் சீறிப் போரிட்டபோது, விடுதலைக் காரியாலயம், காங்சிரசை ஒழித்துக் கட்டுங்கள்—காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று மக்களுக்கு அறிவு விளக்கம் தர, அவர்களை ஆண்மையாளர்களாக்க, கருப்பிலும் சிகப்பிலும் போஸ்டர்கள் பல இலட்சம் வெளியிட்டு, விற்பனை செய்தார்கள்—அதை நினைவூட்டுகிறேன் — உனக்கு மட்டுமல்ல — அவர்களுக்கோ என்று கேட்டு விடாதே, அவர்களுக்கு நான் தரும் கரும்பும் கசக்கும் — நாட்டவருக்கு நினைவூட்டுகிறேன்.

அன்று காங்கிரஸ், எந்த அளவுக்கு, வெறுக்கப்பட வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய, கேடான ‘ஸ்தாபனமாக’ இருந்ததோ, அதிலே ஏதேனும் ஒரு துளி மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? நாமெல்லாம் வாழ்த்தி வரவேற்கத்தக்க, அல்லது சகித்துக்கொள்ளத்தக்க விதமான அமைப்பாக, காங்கிரஸ் மாறிவிட்டதா? பார்ப்போம்—இந்த ஒரு தடவை இருந்து தொலைக்கட்டும்—என்று கூறத்தக்க, மனநிலையை நாம் பெறுவதற்கான திட்டங்களை, காங்கிரஸ் நாட்டுக்கு அளித்திருக்கிறதா? என்பன போன்ற எண்ணங்கள் என் மனதைக் குடைகின்றன, மனமென்ற ஒன்று இருந்து தொலைப்பதால்!

சென்ற பொதுத் தேர்தலின் போது இருந்ததைவிட, எல்லாத்துறைகளிலும், காங்கிரஸ், கேடு தருவதாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

சிறையிலே தள்ளிச் சித்திரவதை செய்வதிலும், தெருவில் செல்வோரைத் துரத்தித் துரத்தி அடிப்பதிலும், மிரண்டு ஓடுவோரைச் சுட்டுக் கொல்வதிலும், காங்கிரஸ் பயங்கரமான பயிற்சி பெற்றுவிட்டிருப்பது காண்கிறோம்.

இன்று எந்த இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம், ஊரடங்கு சட்டம், எந்த இடத்தில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டனர் என்று வெளியிடப்பட்டிருக்கிறதோ என்ற பயத்துடன் தான், நாளிதழ்களைப் பிரித்துப் படிக்க வேண்டி இருக்கிறது.

சென்ற பொதுத் தேர்தலின் போது, காங்கிரசாட்சியினால் விழுந்த பிணங்களின் எண்ணிக்கையைக் கூறினோம்—இந்தத்-