பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

197

மத்திய சர்க்காருடைய ‘லகா’னில் நாம் இருக்கிறோம்.

இந்த நிலை இருக்குமட்டும் இங்கு வாழ்வும் வளமும் கிடைக்காது.

எனவே அனைவரும் ஒன்றுகூடி எழுமின்.

இந்த இராஜ்யத்துப் பொருளாதார சுதந்திரம் பறிபோகாமல், தடுத்து நிறுத்த வேண்டும்.

உடனே! உடனே! அனைவரும் அனைவரும்!!

இந்த முறையிலே இருக்கிறது. சுகஸ்தானத்திலிருந்து வெளிவரும் அறிக்கை!

பட்டால்தான் தெரிகிறது பலருக்கும்.

உன் அண்ணன், துரும்பைத் தூணாக்கிக் காட்டுகிறான், ரோச்விக்டோரியா காங்கிரஸ்காரர், அவர் இதுபோலெல்லாம் கூறியிருக்கமாட்டார் என்று, தம்பி, உன்னிடம், யாரேனும் சில காங்கிரஸ் நண்பர்கள் வாதாட வருவர் அவர்களின் மேலான பார்வைக்கு, இதோ இந்தப் பகுதியைக் காட்டு; இது ரோச் விக்டோரியா வெளியிட்ட ஆங்கில அறிக்கையில் உள்ள வாக்கியங்கள்:

The Madras Government have been approached several times, the Legislators of the Tinnevelly district have also made representations on behalf of the South Indian venture and the public were looking to the state government to give an encouragement to the scheme.

The Madras Government is however helpless in the matter, for the Government of India in the Commerce and industries department are dictating the policy as to what should be done or what should not be done in the State of Madras.

WE ARE TIED TO THE APRON STRINGS OF THE CENTRAL GOVERNMENT.

It is time therefore that all those who are interested in the industrial development of the south, should join hands and see to it that the economic freedom of the State in particular and the South as a whole, is not taken away from us.