பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

களில் கடன்படும் ஆட்சி, அடக்குமுறை அவிழ்த்துவிடும் ஆட்சி.

என்று அடுக்கடுக்காக, அருவருப்புடன் காங்கிரஸ் ஆட்சியின் அவலட்சணத்தை எடுத்துக் காட்டுகின்றனர்; எனினும் இறுதியில், ஒரு பெருமூச்சுடன் இவ்வளவு அக்ரமம் செய்த ஆட்சிதான் என்றாலும், தேர்தலில் மக்களை வளைய வைப்பதற்குத் தேவையான பணபலத்தை மலைபோலப் பெற்றிருக்கிறதே! பாபம், திராவிட முன்னேற்றக் கழகத்தார், ஓயாது உழைக்கிறார்கள், உள்ளன்புடன் பாடுபடுகிறார்கள், ஏச்சும் இழிமொழியும் பழிச்சொல்லும் வீசப்படுகிறபோதும் தாங்கிக்கொண்டு பணியாற்றுகிறார்கள். எனினும் தேர்தலில் ஈடுபடுவதற்குத் தேவையான பணபலம் இல்லையே—ஏராளமான செலவு இருக்கிறதே, எப்படிச் சமாளிக்க முடியும் என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். நமது கழகத் தோழர்களிடையேகூட இந்தப் பேச்சு எழக் கேட்டிருக்கிறேன்.

தம்பி! ஆண்டியப்பனைப் பார்த்தோமல்லவா! அதுபோலத்தான், நமக்குக் கையிலே போதுமான பணவசதி இல்லாதிருக்கலாம்; ஆனால் நாம், பொதுமக்களிடம் ஆற்றிவரும் பணி வீண்போகப் போவதில்லை; அவர்களிடம் பணம் இல்லை; எனவே, செலவுக்கு அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாகாது, நம்மாலானதையெல்லாம் நாம் செய்து தரவேண்டும் என்ற ஆர்வத்துடன், தூய தொண்டுக்கு துணை நிற்க வேண்டும் என்ற நல்ல மனம் படைத்தோரெல்லாம் முன்வரத்தான் செய்வார்கள்.

தம்பி! அரசியலில், அதிலும் தேர்தல் கால அரசியலில், பணத்துக்கு இருக்கிற செல்வாக்கையும் கண்டிருக்கிறேன்; பணபலத்தையும் சுக்கு நூறாக்கக்கூடிய மக்கள் சக்தி வீறுகொண்டெழுந்ததையும் பார்த்திருக்கிறேன். எனவே நான், நமது கழகத்துக்குப் போதுமான தேவையான பணபலம் இல்லை என்பது பற்றி எண்ணாமலுமில்லை, சில வேளைகளிலே ஏக்கம்கூட அடைகிறேன். ஆனால் உன்னிடம் சொல்லுவதிலே மகிழ்ச்சி அடைகிறேன். மனம் உடைந்து போகவில்லை—அந்த நிலை ஏற்படவிடக்கூடாது என்று நமது கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும், ஆண்டியப்பனுக்கு இலவசமாக மருத்துவமும் பார்த்து, பழம் பண்டமும் வாங்கித் தந்த டாக்டர் போல, பரிவுடன் நடந்துகொள்ளக் காண்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்.

சென்ற கிழமை சென்னை மூலக்கொத்தளம் வட்டாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் நிதி 100 ரூபாய் தருவ-