பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

217

எங்கள் கட்சிக்கு எத்தனை ‘ஓட்டு’ நஷ்டம் தெரியுமா? இனி இப்படியெல்லாம், சாகாதீர்கள்—எப்படியும் ஐந்தாண்டுக்கு ஒரு தடவை எங்கள் கட்சிக்கு ஓட்டுத் தரவேண்டுமே அதை மறந்துவிட்டு, மடிந்து போகிறீர்கள்—இது மன்னிக்கமுடியாத குற்றம்! எனினும் பொறுத்தேன்—இனி இந்தத் தேர்தலில் அனைவரும் கூடி, ஐந்தாண்டுத் திட்ட பஜனைபாடி, ஓட்டுச்சாவடிக்கு ஓடி, மாட்டுப் பெட்டியை நிரப்புங்கள்”—என்று கூடப் பேசுவார்.

தமிழ் நாட்டிலே, இந்த அரியலூர் விபத்தின்போது மட்டுமல்ல தம்பி, முன்பு இருமுறை புயலால் பேரிழப்பு நேரிட்டபோதும், நேரு பண்டிதர் வரவில்லை. உனக்கு நினைவிலிருக்கும், புயல் நிவாரண நிதிக்காகப் பணியாற்றியிருக்கிறாயே! காங்கிரஸ் நண்பர்களுக்கு நினைவில் இருக்காது; நினைவிற்குக் கொண்டு வருவது என்றாலும், அவர்களுக்குச் சங்கடமாக இருக்கும்.

ஆனால் நாடு எப்படி மறக்கமுடியும்? தமிழகத்தில் புயலாலும் வெள்ளத்தாலும் இரயில் விபத்தாலும் பயங்கரமான அழிவு நேரிட்டு, அழுகுரல் பீறிட்டுக் கிளம்பிய நேரத்திலெல்லாம், நேரு பண்டிதர் வரவில்லை.

தமிழகத்திலே தேர்தல் பிரசாரத்துக்கு இப்போது வருகிறார்; முன்பும் வந்திருந்தார்!

தேர் திருவிழாப் போல நடத்தப்படும் கோலாகலங்களிலே கலந்துகொள்ள, அடிக்கடி வருகிறார்—ஆனந்தத்தோடு வருகிறார்!

சங்கீத வித்வத் சபையின் துவக்க விழாவா? வருகிறார்!

கண் காட்சி துவக்கவேண்டுமா? வருகிறார்!

திருவிதாங்கூர் சமஸ்தானத்துக் காட்டிலே, கண்ணாடி மாளிகையிலே தங்கி இருந்து, கரிகளின் காதல் விளையாட்டினையும், புலியாரின் களியாட்டத்தையும் கண்டு களிக்கலாம் என்று அழைப்பு விடுத்தனர்; சென்றார், கண்டார்!

தமிழ் இசையை நான் அறியேன்! இசையே கூடப் பொதுவாக எனக்குப் புரியாது! எனினும் சுப்புலட்சுமியின் கானம் கேட்கும்போது, விவரிக்க முடியாததோர் ஆனந்தம் எழத்தான் செய்கிறது. சுப்புலட்சுமியார் சங்கீத ராணி!—என்று நெஞ்சு நெக்குருகப் பேசினார்!

எல்லா விழாக்களுக்கும் அழைப்பு அனுப்பினால், தமிழகம் வருகிறார்—விபத்து, அழிவு நேரிடுகிறது என்றால்,

அ.க. 4 — 14