225
ஆறாத் துயரம் கொண்டிருக்கிறது. நேருபண்டிதரைக் கண்டால் அந்தத் துயரமும் கோபமும், பகலவன் முன் பனிபோலாகும் என்று காமராஜர் கருதுகிறார்—பலமுறை அதுபோலாகி இருக்கிறது—இம்முறை அது பலிக்கப் போவதில்லை; மக்கள் மனம், கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
நாம் மட்டுமல்ல தம்பி, நாட்டிலே உள்ள பல்வேறு முற்போக்குக் கட்சிகளும், தமிழர் மிகப்பெருவாரியாகக் குடியேறி உள்ள வெளிநாடுகளுக்காகிலும், தமிழர்களையே தூதுவர்களாக அனுப்பி வைக்க வேண்டும்—இது உரிமைப் பிரச்சினை என்றுகூட அல்ல, வசதியைக் கவனித்தாலே, இதுபோலச் செய்வதுதான் திறம் தரும் என்பதை வலியுறுத்திக் கூறியபடி உள்ளன.
பொதுக் கூட்டங்கள் பலவற்றிலே, மன்றங்களிலே, மாநாடுகளிலே, விளக்கப்பட்டு வேண்டி கேட்டுக் கொள்ளப்பட்டது.
தமிழர்களைத் தூதுவர்களாக அனுப்புவதால், டில்லிக்கு நஷ்டம் ஏதும் ஏற்படப்போவதுமில்லை, அதனைச் செய்வதிலே நஷ்டமும் எழாது.
இங்குள்ள தமிழர்களும் இதை விரும்புகிறார்கள், குடி ஏறியுள்ள தமிழர்களும் ஆவலுடன் வரவேற்கிறார்கள்.
எனினும் இந்த ஒரு சிறிய காரியத்திலேகூட, டில்லி தன்போக்கை மாற்றிக் கொள்ளவில்லை! மேதைகள் கேட்கிறார்கள், காதிலே ஏறவில்லை! அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பிரமுகர்கள்கூடக் கேட்கிறார்கள், அதனையும் டில்லி பொருட்படுத்த மறுக்கிறது. தொடர்ந்து, துணிந்து, எல்லா இடங்கட்கும் வடக்கிலிருந்தே தூதுவர்களை அனுப்புகிறது—அதிலும் குறிப்பாக, தமிழர்கள் மிகப் பெருவாரியாகக் குடி ஏறியுள்ள நாடுகளில்! நியாயமா? கேட்டுப்பாரேன், காங்கிரஸ்காரர்களை. “என்ன தோழரே! செய்வது?” என்று பரிதாபத்தோடு சிலரும், “இதெல்லாம் ஒரு பெரிய, பிரமாதமான பிரச்சினை அல்ல” என்று அலட்சியமாகச் சிலரும் பேசுவர்—ஆனால் அந்தக் காங்கிரஸ்காரர் மனதிலெல்லாம் நிச்சயமாக, கசப்பு முற்றிக்கொண்டுதான் வருகிறது. இதை, நேருவின் விஜயம் மாற்றி விடாது.
நேருபண்டிதர் தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்தால்தான், காங்கிரசை எதிர்த்துத் தேர்தலில் ஈடுபடும் நமது கழகத்தின் செல்வாக்கைச் சிதைத்திட முடியும் என்று காமராஜர் கணக்குப்போடுவது, தவறு என்பது மட்டுமல்ல