226
அவர் அந்தக் கணக்குப் போடுவதன் மூலம், நமது கழகத்திடம் எவ்வளவு கடும் கோபம் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது மட்டுமல்ல, பெரியாரின் துணையை அவர் போதுமானது என்று எண்ணவில்லை.
காமராஜர் கருதுவதுபோல் நேருபண்டிதர் இங்கு வந்து பேசுவதன் மூலம், நமது கழகத்துக்குப் புதிதாக ஏதேனும் ஓர் எதிர்ப்பு கிளம்பும் என்று நான் நம்பவில்லை! நேருபண்டிதருக்குப் ‘பாவம், சர்வதேச நிலைமையை விளக்கிட, தனக்கும் பிறநாட்டுத் தலைவர்களுக்கும் உள்ள தொடர்புகளைச் சித்தரித்துக் காட்டவே நேரம் போதாது!’ மேலும் தம்பி; நமது கழகத்திலுள்ள பணியாளர்களை, குறிப்பாக உன் அண்ணனைப் பற்றி,
- அடுத்துக் கெடுப்பவர்
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வோர்
ஊர் சுற்றிகள்
- அடுத்துக் கெடுப்பவர்
என்று கடுமையாகவும், காரசாரமாகவும் பேசிடவா தெரியும்! அதற்கெல்லாம் பெரியார் இருக்கிறார்! வேறு எதற்காக நேருபண்டிதரைக் காமராஜர் வரவழைக்கிறாரோ தெரியவில்லை.
காரணம் எதுவாயினும், தம்பி, நேரு பண்டிதரின் ‘விஜயம்’, இங்குள்ள பொதுமக்கள் மனதிலே, பல்வேறு சம்பவங்களின் மூலமாக மூண்டு கிடக்கும் கசப்பினைப் போக்கிடப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.
நேரு பண்டிதரைப் பார்க்கும் போதே, புயலின்போது நாம் புலம்பிக் கிடந்தபோது வராத நேரு, வெள்ளக் கொடுமையிலே மூழ்கி வதைபட்டபோது வராத நேரு, அரியலூரில் விபத்தினால் கதறித் துடித்தகாலை வராத நேரு, இப்போது ஓட்டுக்காக மட்டும் வந்திருக்கிறார், பாரீர்! என்ற எண்ணத்தை உமிழும் கண்களுடன்தான் மக்கள் இருக்கப் போகிறார்கள்.
ஒவ்வொரு துறையிலும் தமிழர்களின் முகத்தில் கரி பூசப்படும் கொடுமைக்கு யார் தலைமை வகித்திருக்கிறாரோ, அந்த நேரு இவர்தான் என்றுதான் பார்க்கப்போகிறார்கள்.
- “தமிழ் மக்கள் குடி ஏறி இருக்கும் நாடுகளான இலங்கை, பர்மா, மலேயா, தென்னாப்பிரிக்கா, முதலிய நாடுகளில், தமிழர்கள் தூதுவர்களாக நியமிக்கப்படுவதே, பொருத்தமுடையதாகும். தமிழ்நாட்டைச்