228
வடக்கு வேறு, தெற்கு வேறு என்று பேசுவது அவர்களுக்குக் கசப்பாக இருக்கிறது.
இனப் பிரச்சினையை எழுப்பினாலே, கடுப்பெடுக்கிறது.
எனினும், அவர்கள் அனைவருக்குமே எங்கோ ஓர் ‘சுருதி பேதம்’ இருப்பது தெரிகிறது.
அவர்கள், மாகாணங்களுக்கு அதிகமான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்று வாதாடுவதும், வாதங்கள் பலிக்காது போனால் போராடுவதும்தான் அரசியல்; வடநாடு-தென்னாடு என்று குறிச் சொற்களைக் காட்டிப் பேசுவது ‘காட்டுமிராண்டித்தனம் என்று எண்ணிக் கொள்கிறார்கள்; தம்பி, இவர்களின் அரசியலாவது வெற்றிபெறுகிறதா? அதுதான் இல்லை.’
ஏற்கனவே உள்ள அதிகாரங்கள் போதாமல், மேலும் மேலும் மத்திய சர்க்காரிலே அதிகாரங்களைக் கொண்டுபோய்க் குவித்துக் கொள்ளும் போக்குத்தான் காண்கிறோம்.
வடக்கு—தெற்கு என்று பேசுவது அறிவுடைமை அல்ல என்று கருதும் “நகாசு” வேலைக்காரர்களையே கேட்கிறோம், அந்தப் பேதம் ஆகாது என்றால், ஏன் தமிழனுக்கு உரிமை தரவில்லை. தமிழனை ஏன் உயர் பதவியில் அமர்த்தவில்லை? தமிழனை ஏன் தூதுவர்களாக்கவில்லை என்று எப்படிக் கேட்கத் தோன்றுகிறது!
லங்காஷயர்காரருக்கே பதவியா? வேல்ஸ்காரருக்கே விருதுகளா? ஷெப்பீல்டுகாரர்களுக்கே பட்டமா? என்று இங்கிலாந்தில் கேட்பதில்லை; காரணம், அங்குள்ள மக்கள் அனைவரும் தம்மை ஆங்கிலேயர் என்று நம்புவதால்—அந்த எண்ணம் குருதியில் கலந்துவிட்டிருப்பதால்!
இங்கும் அதுபோல, நேருபண்டிதரும், அவர் கூறுகிறாரே என்பதாலே பிறரும், அனைவரும் இந்தியர் என்று பேசுகிறார்கள்.
இந்தப் பேச்சு உண்மை உணர்ச்சியை, இயற்கையைக் காட்டுவதாக இருந்தால், அடிக்கடி பல்வேறு துறைகளிலேயும், நம்மைப் புறக்கணித்து விட்டார்கள், நமது நலன்கள் பாழாக்கப்பட்டுவிட்டன; நமது உரிமைகள் அழக்கப்படுகின்றன; என்ற குமுறல் எழக் காரணம் என்ன?
- “இன்று இந்தியாவில் எந்த இராஜ்யத்திலும் தமிழர், கவர்னராக இல்லை. இந்தியாவின் மற்றப் பகுதி-