பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

229

களில் கிடைக்காத பதவி தமிழருக்கு தமிழ் நாட்டிலேயாவது கிடைக்கட்டுமே.

தமிழ் நாட்டுக்கு ஒரு தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டால், டில்லியில், யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது.”

தம்பி! ‘குமுதம்’ இதுபோல் எழுதிடக் காண்கிறேன்! ஏன், இந்த ஆவல் எழுகிறது! தமிழனுக்கு இந்தியாவிலே எந்த இடத்திலும் கவர்னர் பதவி இல்லையே என்ற ஏக்கம் ஏன் எழுகிறது!

தமிழருக்குத் தமிழ் நாட்டிலேயாவது

என்பதிலே தொக்கி நிற்கும் துயரத்துக்குக் காரணம் என்ன?

இந்தியர் என்று பேச முடிகிறதே தவிர, பேசுவது இன்றைய அரசியல் நாகரீகம் என்று கருதுகிறார்களே தவிர, அதிலே ஆழ்ந்த நம்பிக்கையோ, பற்று பாசமோ இல்லை—இயற்கையாக எழுவதில்லை!

தமிழ்நாட்டுக்குத் தமிழர் கவர்னர் ஆகவேண்டும் என்று எண்ணச் செய்யும் உணர்ச்சிக்கு ‘குமுதம்’ என்ன பெயரிடுகிறதோ, நான் அறியேன்! எனக்கென்னவோ நாமக்கல் கவிஞரின் பாடல் செவியில் விழுகிறது.

தமிழன் என்றோர் இனம் உண்டு
தனியே அவர்க்கோர் பண்பு உண்டு

அவ்வளவு பச்சையாகச் சொன்னால், அண்ணாத்துரைக்கும் நமக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாமல் போய்விடுமே, நாமென்ன அவன்போலவா, அரசியலில் அந்தஸ்து குறைந்த நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு என்பதை நான் அறிந்திருக்கிறேன்.

தம்பி! இதிலே இன்னொரு வேடிக்கையைக் கவனித்தாயா?

“தமிழ் நாட்டுக்குத் தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது.”

என்ற வார்த்தை இருக்கிறதே, அதிலே உள்ள நயங்களும் அதற்குள்ளே புதைந்துள்ள உணர்ச்சிகளும், பலமுறை படித்துப் படித்துப் பார்த்தால்தான் அறிந்து ரசிக்கமுடியும்.