231
தமிழ்நாட்டுக்குத் தமிழரை கவர்னராக நியமிக்கும்படி நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டும் என்று யோசனை கூறியதும், ஆசிரியருக்கு வேறோர் யோசனை வருகிறது.
- நமது அமைச்சர்கள், டில்லியின் கோபம் கிளம்பிடும் என்று மருளக் கூடியவர்களாயிற்றே! என்று எண்ணம் வந்தது.
உடனே, நமது அமைச்சரவைக்கு தைரியம் கொடுக்கிறார்.
- மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது!
என்று கூறுகிறார்!
ஏண்டா! இப்படிப் பயந்து, தொடை நடுங்கியாக இருக்கிறாய்! உயிர் ஒன்றும் போய்விடாது—என்று கோழைக்கு அச்சமற்றவன் கூறுவதிலே உள்ள ‘ரசம்’ இதிலே இருக்கிறதல்லவா? ஆம், அண்ணா என்பாய், தம்பி. இதனினும் மேலான ‘ரசமும்’ இருக்கிறது, கேள்.
அமைச்சரவையின் அச்சத்தைப் போக்கி, தைரியமாகத் தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னர் வேண்டும் என்று கேளுங்கள், டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது—என்று வீரச்சூரணம் தருகிறாரல்லவா ‘குமுதம்’ ஆசிரியர், அவரைப் பார்த்து,
- தமிழ் நாட்டுக்கு யார் கவர்னராவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஏனய்யா மத்திய அரசாங்கத்திடம் இருக்கவேண்டும்? தமிழ் நாட்டு அரசிடமே அந்த உரிமை இருத்தலாகாதா? தமிழ் நாடு தனி நாடு என்ற நிலை ஏற்படுமானால் காவடி தூக்கும் கேவலம் எழாதல்லவா!—
என்று கூறிப்பார்! ஆசிரியருக்கு மூர்ச்சை போட்டுவிடும்!!
ஆசிரியர்கள் நிலையே இது என்றால், அமைச்சர்கள் அச்சம் கொள்வதிலும், ஆமையாவதிலும், ஊமையாவதிலும், ஆச்சரியப்படுவானேன்!
பிரச்சினை இதுதான், தம்பி. பலருக்கும் நன்றாகத் தெரிகிறது தமிழகத்தின் தாழ் நிலையும், அதற்கான சூழ்நிலையும், உள்ளமும் குமுறச் செய்கிறது. அதனை எடுத்துக் காட்டிப் பரிகாரம் கேட்பதிலே ஈடுபட்டால், ‘உள்ளதும்’ போய்-