பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

விடுமோ என்றுகூடச் சிலர் அஞ்சுகிறார்கள். மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி என்று இந்தத் தேர்தல் முடிவு இருக்குமானால், ‘மத்திய அரசாங்க’ப்பிடி, இரும்புப்பிடியாகிவிடும் என்ற நிலைமை இருக்கிறது. இதனை நன்கு உணர்ந்துள்ள யாரும், நேரு பண்டிதரின் ‘திக் விஜயத்தி’னால், தங்கள் நெஞ்சிலே மூண்டுள்ள நெருப்பை அணைத்துக்கொள்ள முடியாது. எரிகிற தழலில் எண்ணெய்தான், நேருபண்டிதரின் பவனி!!


16—12—1956

அன்பன்,
அண்ணாதுரை