கடிதம்: 79
காட்டாட்சி...
- ஆமதாபாத்தில் குழப்பம்—பட்டேல் தினம்—‘மகா குஜராத்’ கிளர்ச்சி.
தம்பி!
பம்பாய்க்காரர் பட்டீல் காங்கிரசை கேரளத்தில் வெற்றி பெறச் செய்வதற்காகவென்றே, தனியானதோர் திட்டத்துடன் அனுப்பப்படுகிறாராம். புறப்படுவதற்கு முன்பு பட்டீல், தமது திட்டத்தில் ஒரு துளி எடுத்துக் காட்டினார்—ஓட்டு வேட்டைக்கு இந்தத் தடவை சினிமாப்படம் பயன்படுத்தப்படுமாம்!
மிகப் பெரும்பாலான மக்கள் தற்குறிகளாக உள்ள இந்த நாட்டிலே, சினிமா மூலம் நல்லவிதமான பிரசாரம் நடத்தலாம்—படக்காட்சியைக் காணும்போது கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சி ஏற்படும்—மக்கள் மகிழ்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து, காங்கிரசுக்கு ‘ஓட்டு’ தாருங்கள் என்று கேட்டுப் பெறுவது எளிது என்பது பட்டீல் வாதம்.
இந்தத் திட்டத்தை, நெடுந் தொலைவிலிருந்து, பட்டீல் வந்துதானா செய்துகாட்ட வேண்டும்—பனம் பள்ளியிடம் ஒரு படம் கொடுத்தால் போதாதா என்று கேட்கிறாய், தெரிகிறது; ஆனால், தம்பி! ஒரு விஷயம் உனக்குப் புரியவில்லையே, கேரளத்துக்குப் பட்டீல் தேவை என்பதற்காக அவர்
அ. க. 4—15