236
லில் கொளுத்துங்கள்; என்று கூற முடிகிறது! மனம் இடம் தருகிறது!!
அங்கெல்லாம், அவ்விதமில்லை; எமது பிறப்புரிமையைப் பறித்திட உனக்குத் துணிவு பிறந்துவிட்டபோது, எனக்கும் உனக்கும் என்ன பந்தம் பாசம், ஒட்டு உறவு, சொந்தம், போ! போ!—என்று உரிமைக்காகக் கிளர்ச்சி நடத்துவோர், முழக்கமிடுகிறார்கள்!
அவர்கள் கையாண்டுவரும் முறைகள், தம்பி, எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் அவர்கள் உரிமைக்காக எழுச்சி பெற்று பணியாற்றும் போக்கினைப் பாராட்டாமலிருக்க முடிகிறதா!!
அமைச்சர்கள் படுகிற அவதியைக் காணும்போது, பட்டீல் எப்படி அங்கு தேர்தலின்போது இருந்திட ஒப்புவார்! எனவேதான் கேரளம் வருகிறார்.
- பலமான கல்வீச்சு
- போலீஸ் சவுக்கிமீது தாக்குதல்
- முனிசிபல் லாரிகள் தகனம்
- போலீசாருக்குக் காயம்
- விளக்குகள் உடைக்கப்பட்டன
- பொதுக் கூட்டம் கலைக்கப்பட்டது
- கைகலப்பிலே பலருக்குக் காயம்
- கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு!
தம்பி, ஆமதாபாத் நகரில், டிசம்பர் 15-மாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளை, தலைப்புகளாகத் தந்திருக்கிறேன்; இவற்றைக் கொண்டு, நீ, மனக்கண்ணால் பார், நிகழ்ச்சியை.
- கூட்டம் போட வந்துவிட்டார்களா, கூட்டம்?
அவ்வளவுக்குத் துணிந்துவிட்டார்களா, அக்ரமம்,
ஜீரணமாகிவிடும் என்ற எண்ணமோ!
- கூட்டம் போட வந்துவிட்டார்களா, கூட்டம்?
என்று, சிறு சிறு பிரிவினர் உரையாடுவது, தெரிகிறதா!
கூட்டத்தில் பேசும் பிரமுகர், எந்த போலோ பாரத்மாதாகீ என்ற முழக்கமும், மகாத்மா காந்திக்கு ஜே என்ற முழக்கமும், கோடிக்கணக்கான மக்களைச் சொக்கிட வைத்-