பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

வேறோர் இடத்திலே காங்கிரஸ் ஏற்பாடு செய்த கூட்டம்.

இதைக் கண்டதும், ஆத்திரம் பிறந்தது—ஆர்ப்பரிப்பு எழும்பிற்று—அமளி மூண்டது!

யாரோ இரண்டொரு காலிகள் செயல் என்று, தேசீய ஏடுகளாலேயே இதனை அலட்சியப்படுத்திவிட முடியவில்லை. கல்வீச்சு கண்டிக்கத்தக்க செயல்; ஐயமில்லை! ஆனால் கல்வீச்சிலே ஈடுபட்டவர்கள், விரல்விட்டு எண்ணத்தக்க சிலர் அல்ல.

மாணிக்கசௌக் பிரதேசத்தில் 3000 பேர்கள் கற்களை வீசினர்!

என்று ‘மித்திரன்’ தெரிவிக்கிறது!

மூவாயிரம் பேர் கல்வீச்சில் ஈடுபட்டால், எத்துணை அலங்கோலம் ஏற்பட்டிருக்கும், எவ்வளவு அமளி மூண்டுவிட்டிருக்கும்; எண்ணிப் பார்க்கும்போதே தம்பி, அந்தக் கண்றாவிக் காட்சி தெரிகிறதல்லவா?

போலீசார் 14 கண்ணீர் வாயு வெடிகளை உபயோகித்தனர்.
போலீஸ்மீது சோடாபுட்டிகள் வீசப்பட்டன.
கூட்டத்தைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்திற்று!
போலீசைத் தாக்கிட ஜனத்திரள் முனைந்தது.
மொத்தம் 30-போலீசாருக்கு மேல், காயமுற்றனர்.
நாலு ஆபீசர்களுக்குப் பலமான தாக்குதல்.
போலீஸ் லாரிகள் ஜரூராயின!
போக்குவரத்துக்கு ஜனக்கூட்டம் தடைகளைப் போட்டுவிட்டன!
முனிசிபல் பஸ்கள் கொளுத்தப்பட்டன.

தம்பி! பெரியதோர் அமளி நடந்திருக்கிறது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், தேசீய ஏடுகள் தகவல்களைத் தருகின்றன!

வெறும் காலிகள் சேட்டை அல்ல இது! பொறுப்பு உணர்ந்தவர்களுக்கே, ஆத்திரம் பொங்கி எழத்தக்க