240
‘மோசமான’ நிலைமை காங்கிரஸ் அமைச்சராகப் பணியாற்றும் ஒரு அம்மையாருக்கு ஏற்பட்டது. அது டிசம்பர் 14ல்.
இந்துமதி சிமன்லால் சமூக நலமந்திரி! மாதர்குல நலனுக்காக, துவக்கப்பட்ட ஜோதி சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொள்ள அம்மையார் சென்றார், கிளர்ச்சிக்காரர்கள் வளைத்துக்கொண்டனர்.
அமைச்சரின் மோட்டார் ‘பன்ச்சர்’ செய்யப்பட்டதாம்! நடந்தே சென்றார்களாம் அமைச்சர்! வழிநெடுக, ஒரே கூச்சல், கேலி, கண்டனம், இடையிடையே கல்வீச்சு! கலவரத்தில் ஈடுபட்டவர் தொகை 2000 என்று, பம்பாய் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை எழுதுகிறது.
அமைச்சரின் விலாவிலும் முதுகிலும் அடியாம்! அவருக்குத் துணைசென்ற பத்து பன்னிரண்டு தாய்மார்களுக்கும் தாக்குதலாம்! பெண்களைப் பாதுகாக்கச் சென்ற போலீசாரில் ஐவருக்குப் பலமான காயமாம்! இத்தனைக்கும் போலீசார், கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பார்த்தனர், கல்வீச்சின் முன்பு, அது போதுமான பலன் தந்ததாகத் தெரியவில்லை!
கார் கெடுக்கப்பட்டு விட்டதால் கால்நடையாகச் சென்றாரல்லவா, அம்மையார்; வழியில் பாவம், உருட்டிக் கீழேகூடத் தள்ளிவிட்டார்களாம்!
இவ்வளவு சங்கடத்தையும் சமாளித்துக்கொண்டு சங்கம் சென்றார். அங்கு என்ன நடந்தது தெரியுமா, தம்பி! உள்ளே நுழையாதே! என்று முழக்கமிட்டனர். யார்? பெண்கள்! மகா குஜராத் ஆதரவாளர்.
புதிய முதலமைச்சர் சவான் மட்டும் தப்பினாரா? இல்லை, தம்பி, இல்லை.
ஆமதாபாத் காங்கிரஸ் மாளிகையில், ஊழியர்கள் கூட்டம் நடத்த வந்தார் முதலமைச்சர்.
வருகிற வழியிலேயே கலகம் ஆரம்பமாகிவிட்டது; கல்வீச்சு பலமாகிவிட்டது; கருப்புக்கொடிகள் ஏராளம்; கட்டுக்கு அடங்கும் போக்கு இல்லை; போலீஸ் நடவடிக்கை பலன் தரவில்லை; ஆர்ப்பாட்டக்காரர் அமளிநிலை உண்டாக்கி விட்டனர். இது காலையில்.
மாலையிலோ, காங்கிரஸ் மாளிகையையே ஆர்ப்பாட்டக்காரர் முற்றுகையிட்டு விட்டனர். போலீஸ் வளையம், அவர்களைத் தடுத்தது, ஆர்ப்பாட்டக்காரர் வளையத்தைப் பிளந்து கொண்டு முன்னேறினர், தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு