பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

‘மகா குஜராத்’ என்ற தேசிய எழுச்சியின் முன்பு, இதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகிறது.

இத்தனைக்கும், தம்பி, குஜராத்துக்கு, தமிழகத்துக்கு உள்ளதுபோன்ற உலகப் புகழ் பெற்ற வரலாறு கிடையாது. எனினும் அங்கே அந்த அளவுக்கு எழுச்சி இருக்கிறது! இங்கு, ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இல்லாவிட்டால் என்ன! ‘குத்துகிறதா, குடைகிறதா’—என்று கேட்கும் காமராஜர் பவனி வருகிறார்.

தம்பி! இந்தக் கருத்துமட்டுமல்ல நான் உன்னைக் காணச் சொல்வது, நாட்டுக்கு எடுத்துக் கூறச் சொல்வது.

அங்கெல்லாம், மொழிக்கிளர்ச்சி எவ்விதமான கோர உருவம் எடுத்திருக்கிறது, எவ்வளவு அமைதியுடன், அறநெறி நின்று இங்கு பணியாற்றுகிறோம்—இதற்கு இங்குள்ள காங்கிரஸ் அரசு, எவ்வளவு சுறுசுறுப்புடன் அடக்கு முறையை அவிழ்த்துவிடுகிறது. இதை எண்ணினேன்—பொது மக்களுக்கு அறிவிக்க, ஒரு துண்டு வெளியீடு அச்சிட்டு வழங்கினால் என்ன என்று தோன்றிற்று—அது இதோ—இதை அச்சேற்றி, இல்லந்தோறும் வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத்தான், தம்பி, நீ இருக்கிறாயே, எனக்கென்ன கவலை.

காட்டாட்சி

மராட்டியம்
குஜராத்
வங்கம்


எங்கும் கலகம்

மந்திரிகளைத் தாக்கினர்
நேருவை மடக்கினர்
போலீசை அடித்தனர்
கார்களைக் கொளுத்தினர்.

கதர்க் குல்லாயைக்
கொளுத்தினர்!

நேரு படத்தை
உடைத்தனர்!

எல்லாம்
மொழி உரிமைக்கு.