இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
243
- அன்புடையோரே!
- அறிவாளரே!
இங்கு நாங்கள்
உரிமை கேட்டோம்,
அமைதியாக
பலாத்காரமின்றி.
- இங்கு
காங்கிரஸ்
- இங்கு
தடியால் தாக்கி
துப்பாக்கியால் சுட்டு
அடக்குமுறை தர்பார் நடத்திற்று.
- ஏன் என்று கேட்கமாட்டீர்களா?
நீதிக்காக வாதாடமாட்டீர்களா?
- ஏன் என்று கேட்கமாட்டீர்களா?
கொடுமைக்கு ஆளானோர்
- உங்கள்
- இனத்தவர்!
உங்கள்
நாட்டவர்!
உங்கள்
தொண்டர்!
- அவர்களிடம் ஆதரவுகாட்டுவது
அடக்குமுறையைக் கண்டிப்பதாகும்.
- அவர்களிடம் ஆதரவுகாட்டுவது
காங்கிரசை
ஆதரிப்பது
காட்டாட்சிக்கு
வழிகாட்டும்.
பட்டீல் கட்சியில் பணம் படைத்தோர் ஏராளம். பல இலட்சம் மிக இலேசாகத் திரட்ட வழி இருக்கிறது. படம் எடுக்கலாம், கட்டணமின்றிக் காட்டலாம்! உன்னால் முடியுமா, என்னால் முடியுமா? நாம், நம்மாலான முறையில், நாட்டுக்கு உண்மையை எடுத்துச் சொல்வோம். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்பார்களே, அதுபோல, இந்தத் துண்டு வெளியீடு என்று எண்ணிக்கொள்ளேன்.