246
பாபம், அவர், ஆமதாபாத்தில் பட்ட அல்லலையும், பம்பாயில் பதறியதையும், மக்கள் பத்திரிகை வாயிலாகப் பார்த்திருக்கிறார்கள்.
பேச வந்தார் இந்தப் பெரியவர்; ஆமதாபாத்திலே, ஆத்திரமிகுந்த மக்கள், இவர் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும், மக்களுக்குத் துரோகம் செய்துவிட்ட மகானுபாவரே! போதும் உமது பேச்சு! நிறுத்திக்கொள்ளும்! என்று பெருங்கூச்சலிட்டு, இவரைப் பேச விடாமலே தடுத்து விட்டனர். பெரிய கலகம் நேரிட்டது. பல நாள் பட்டினி கிடந்து, பரிதாபத்தை ஊட்டிப்பார்த்தார்; பிறகாவது பேசவிடுவார்கள் என்று, அப்போதும் மக்கள், நீ என்ன மாயா ஜாலம், மகேந்திர ஜாலம் செய்தாலும், அதற்கெல்லாம் மயங்கப் போவதில்லை என்று கண்டிப்பாகக் கூறிவிட்டனர். பேச, மேடை ஏறினார், கலகம்தான் மீண்டும்!
எந்த மாகாணத்தில் இவர் தேசிய விடுதலைப் போராட்டக் காலத்திலே, வீரர் என்றும் தீரர் என்றும் தியாகி என்றும் கர்மயோகி என்றும் புகழ்ந்துரைக்கப் பட்டாரோ, அங்கு இவருடைய பேச்சு, செல்லாக்காசு ஆகிவிட்டது—இவர் வருகிறார் பூவிருந்தவல்லிக்கு!!
பாரததேசம் என்பது ஒன்று—இதிலே வடக்கு என்றும், தெற்கு என்றும், மத்திய சர்க்கார் என்றும், மாநில சர்க்கார் என்றும், இந்த மொழி என்றும், அந்த மொழி என்றும் பேசிப் பிளவு உண்டாக்கக்கூடாது என்று மொரார்ஜி ‘தேசீய மாமந்திரம்’ உபதேசித்தார்; அவருடைய மாகாணத்திலே, அவரை இந்த உபதேசத்தைப் பேசக்கூட விடவில்லை; விரட்டி அடித்தனர், வீறுகொண்ட மக்கள்! அங்கு அல்லற்பட்டவரை அழைத்து வந்து இங்கு விழா நடத்திக் காட்டினார் அமைச்சர் பக்தவத்சலம்!! பரிதாபம்! ஆரம்பமே அழுது வடிவதாக அமைந்தது பற்றி அவருடைய ‘ஆப்த’ நண்பர்களேகூட ஆயாசப்பட்டுக் கொண்டார்களாம்!!
முதலமைச்சருடன் சேர்ந்து மொத்தம் நான்கு மந்திரிகள், தம்பி! டில்லி மந்திரி ஒருவர்—அவர்தான் மொரார்ஜி—குட்டி மந்திரி ஒருவர்—அரியலூர் அழகேசன் அவர்கள்!
எல்லோருமே அன்று வெளுத்து வாங்கிவிட்டார்களாம் போயேன், நமது கழகத்தை,
“கூட்டம் கூடும் அவர்களுக்கு—கும்பகோணம் மாமாங்கத்துக்குக் கூடத்தான் கூடுகிறது”—என்றாராம், ஒரு மேதை!! இவர்களுக்குக் கூட்டம் வராததாலே, இந்தப் பேச்சுப் பேசுகிறார்கள், வெட்கமின்றி; பிறருக்குப் பெரிய