253
லேயே குவிக்கப்பட்டிருக்கிறது” என்று பேசுகிறார்; 1955 டிசம்பர் 14-ல்!
பொருள் என்ன இதற்கு? இத்தனைக்கும் இந்த டாக்டர்கள், நம்மை எல்லாம், நாட்டைப் பிடித்தாட்டும் ‘நோய்’ என்று கூசாது பேசுபவர்கள்! அவர் போன்றாருக்கே பொறுக்கவில்லை, வடக்கே எல்லா அதிகாரங்களும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் கொடுமை.
‘சென்னை சர்க்கார் அமைத்த ஆலோசனைக் குழுவே’ 1955 மே 30-ல்,
- “பெரும் தொழில்களைப் பொறுத்த மட்டில் சென்னை மாநிலம் வருந்தத்தக்க அளவு, புறக்கணிக்கப்பட்டிருக்கிறது”
என்று அறிவித்தது. ஏன், இந்த அழுகுரல்?
- புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
என்ற உண்மையையும் கூறுகிறது அந்தக் குழு; அதனால் நாடு வருந்துகிறது, வருந்தவேண்டும், என்ற எண்ணத்தையும், விளக்கிட,
- வருந்தத்தக்க
என்றும், எழுதுகிறது! ‘தேசியம்’ எங்கே ஓடிவிட்டது, இதுபோலக் கேட்கும்போது? இங்கே பெரிய தொழில்கள் இல்லையே என்ற கவலை குடைவானேன்? வருத்தம் பிறப்பானேன்? எங்கே இருந்தால் என்ன என்ற வேதாந்தம் ஏன் பிறக்கவில்லை! ஏன், புறக்கணிக்கப்பட்டு விட்டதே என்ற துக்கம் துளைக்கிறது! அந்த உணர்ச்சி உங்கள் உள்ளத்திலே சுரக்கும் போதெல்லாம், அருமைக் காங்கிரஸ் அன்பர்களே! நீவிர் அனைவரும், தி. மு. க. ஆகிறீர்கள்! பிறகு, பதவி, வேறு பக்கம் அழைக்கிறது, மோசம் போகிறீர்கள், மொரார்ஜீயை அழைக்கிறீர்கள்.
சென்னை மாநிலம் வருந்தத்தக்க அளவு, புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் 1955-ல் கூறிவிட்டு, இப்போது தேர்தலில் ஓட்டு பறிப்பதற்காக, நீங்களே, தாரை தப்பட்டையுடன் கிளம்பி, தமிழாவது தெலுங்காவது, வடக்காவது தெற்காவது எல்லாம் அபத்தம், தமிழ் நாடு புறக்கணிக்கப்பட்டதாகக் கூறுவது பொய்யுரை, என்று பேசுகிறீர்களே, எதையும் ஆய்ந்தறியும் திறனும், முன்பின் பேச்சுகளை ஒப்பிட்டுப் பார்த்து உண்மை காணும் போக்கும் கொண்ட மக்கள், உமது புரட்டினைக் கண்டுகொள்ள மாட்டார்களா?