254
என்று கேட்டால், காங்கிரசின் பெருந்தலைவர்கள் கூறும் பதில், “அவ்வளவு அறிவுத் தெளிவு உள்ளவர்கள், எத்தனை பேர் இருக்கிறார்கள்” என்பதுதான்.
தம்பி! நம் நாட்டுப் பாமர மக்களைக் காங்கிரசார், எப்படி வேண்டுமானாலும் ஆட்டிவைக்கலாம், எதைச் சொல்லியும் நம்பவைக்கலாம், என்று மனப்பால் குடிக்கிறார்கள். மக்கள் இதோ, நான் புட்டுப் புட்டுக் காட்டுவதுபோலப் பிரச்சினைகளை அலசி ஆராயாமலிருக்கலாம், ஆனால் அவர்களுக்கு உண்மையை ஒரு நொடியில் உணர்ந்துகொள்ளும் திறன் இருக்கிறது; காங்கிரஸ் தலைவர்களின் புரட்டினை, மக்கள் உணர்ந்து வருகிறார்கள்; நமது பிரசாரம் இதனைப் பலப்படுத்துகிறது!! மொரார்ஜீக்கள் வருவதாலே, இந்த நம் பணி குந்தகப்பட்டுவிடாது!!
வடநாட்டிலிருந்து இங்கு மொரார்ஜிகள், அடிக்கடி வந்தபடி இருப்பதையும், அவர்கள் வருகிற போதெல்லாம், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், வணங்கி வரவேற்று, வரம் கேட்டுப் பெறுவதையும் காணும் தமிழக மக்கள், அந்த நாட்களில் இங்குவந்த வெலிங்டன், கோஷன், எர்ஸ்கின் போன்ற துரைமார்களிடம் எப்படி இளித்துப்பேசி இனிப்புப் பண்டம் பெற்றார்களோ சீமான்கள், சிற்றரசர்கள், மிட்டா மிராசுகள், அதே செயலைத்தான், இப்போது பக்தவத்சலங்கள், மொரார்ஜிகள் வருகிறபோது செய்கிறார்கள், முறை மாறவில்லை, ஆள்மட்டும்தான் மாறியிருக்கிறது என்பதையா தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள்.
‘ஓட்டு’ வாங்குவதற்காக, தம்பி, காங்கிரஸ் பிரசாரகர்கள், ஐந்தாண்டுத் திட்டச் சாதனைகளைப் பேசுகிறார்களல்லவா! எல்லாப் பேச்சாளர்களுமல்ல, மிகச் சிலரே, அந்தச் சிரமத்தை எடுத்துக்கொள்வர்—பெரும்பாலானவர், நம்மை ஏசிவிட்டாலே போதும், என்று எண்ணிக்கொள்கிறார்கள்—உண்மையிலேயே சிலருக்கு, மிகக் காரமாக நம்மை ஏசுவதால் ஏற்படும் நாக்கெரிச்சலே வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் பேச இடமளிக்காது—நான் இந்தப் போக்குக்கு விதிவிலக்கு என்று குறிப்பிடத்தக்க இரண்டொருவரைக் கூறுகிறேன்—அவர்கள் ஐந்தாண்டுத் திட்டத்திலே பெற்ற அரிய வெற்றிகளைக் கூறி, ஓட்டு கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள். மக்கள், அதைக் கேட்கும்போது உள்ளபடி திகைக்கிறார்கள். பெருமைப்படத்தக்க, மகிழ்ச்சி கொள்ளத்தக்க வெற்றிகள் கிடைத்துள்ளன; நாடு, நலிவு போக்கிக் கொண்டது; எல்லோருக்கும் இன்பவாழ்வுக்கு வழி ஏற்பட்டுவிட்டது; என்றெல்லாம் பேசும்போது, மக்கள் தம்மைச் சூழ