255
இருக்கிற வறுமையைப் பார்க்கிறார்கள்; தமது சொந்த வாழ்விலே கப்பிக்கொண்டிருக்கும் சோகத்தைப் பார்க்கிறார்கள்; என்ன அதிசயம், இது! ஐந்தாண்டுத் திட்டத்தின் அரிய வெற்றியாலே பாலும் தேனும் ஓடுவதாகச் சொல்கிறார், இந்தப் பாழும் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே; நாம் பார்க்கும்போது, பழங்கலமும் அதிலே உள்ள பழஞ்சோறும், அதிலே நெளியும் பூச்சிப் புழுவும் தெரிகிறது! இவர், ஏதோ, இங்கு வளம் கொஞ்சுவதாகக் கூறுகிறாரே! எங்கே அந்த வளம்? யாருக்குப் பயன்படுகிறது அந்த வளம்! என்றுதான், எண்ணித் திகைக்கிறார்கள்.
ஐந்தாண்டுத் திட்டத்திலே அரிய வெற்றிகள் ஏற்படவே இல்லையா? என்று கேட்டால், ஏற்பட்டது! எப்படி ஏற்படாமலிருக்கும், இரண்டாயிரம் கோடி ரூபாயைச் செலவிட்டிருக்கும்போது! ஆனால், நமது கேள்வி, நாட்டு மக்களின் கேள்வி, அதனால் ஏற்பட்ட பலன், யாரை வாழ வைத்திருக்கிறது என்பதுதான்! இதற்கு மொரார்ஜிகள் தரக்கூடிய பதில் என்ன? இதோ என்னிடம் உள்ள பட்டியல்! நீயும் படித்துப் பார்.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள்
- 1. நந்திகொண்டா
2. கோசி
3. காக்ராபர்
4. ஹரிகே
5. துங்கபத்ரா
6. (டி. வி. சி.) தாமோதர்
7. கோய்னா
8. ஹிராகூட்
9. பக்ரா—நங்கல்
10. ரீகண்டு
11. மயூராட்சி
12. சாம்பால்
13. பத்ரா
14. கட்டபிரபா
15. தூத்வா
16. கீழ் பவானி
17. மச்சகந்த்
- 1. நந்திகொண்டா