பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

டிருக்கிறானே கந்தப்பன், அவன் அரைத்தெடுத்துக் கொடுத்தது!

செந்திலாண்டவன் கோயிலில், சந்தனம் அரைத்துக் கொடுக்கும் ‘ஊழியக்காரன்’ இந்தக் கந்தப்பன்.

பல ஊர்களிலிருந்தும் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், பகவத் பிரசாதம் என்று பயபக்தியுடன் காணிக்கை செலுத்திப் பெறுவதற்காகத் தயாரிக்கப்பட்ட சந்தனம், இந்தக் கந்தப்பன், கைவலிக்க வலிக்க அரைத்தெடுத்துக் கொடுத்தது.

சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு, கந்தப்பன், இரவு பகலாகச் சந்தனம் அரைத்தெடுத்துக் கொடுத்துத்தான், கை சுளுக்கிக்கொண்டுவிட்டது.

மார்பில் பூசிக்கொண்டும், நெற்றியில் பொட்டாக வைத்துக்கொண்டும், சந்தனம் ‘கமகம வென்று இருப்பது குறித்துக் களிப்புடன் பேகிறார்கள், பக்தர்கள்!’

கன்னத்தில் தடவி மகிழ்பவரும், மார்பிலே பூசிக்கொண்டு மந்தகாசமாக இருப்போரும், மாளிகைகளிலே உள்ளனர்.

உண்ட ருசியான பண்டம் ‘ஜீரணம்’ ஆவதற்காகப் பூசிச்கொண்டு முருகா! கடம்பா! கந்தா! வடிவேலா!—என்று கூறிப் புரண்டுகொண்டிருக்கிறார்கள், சில பக்தர்கள். கோயில் அர்ச்சகர், தனக்கு வேண்டியவாளுக்காகப் பிரத்யேகமாக, வெள்ளி வட்டிலில் சந்தனத்தை வழித்தெடுத்துவைத்திருக்கிறார்; வத்சலாவோ சபலாவோ, அபரஞ்சிதமோ அம்சாவோ, அதன் மணம் பெற்று மகிழப் போகிறார்கள்.

காட்டில் கிடைக்கும் மரம்—அதிலே கவர்ச்சியூட்டும் மணம்!—அரைத்தெடுத்திட உழைப்பாளிக்கு முடிகிறது. சீமான்களின் மாளிகையாக இருந்தால்கூட கந்தப்பன், இவ்வளவு கடினமாக உழைத்திருக்கமாட்டான்; கைசுளுக்கு ஏற்பட்டிருந்திராது. செந்திலாண்டவன் கோயிலில் சந்தனம் அரைத்துக் கொடுப்பது என்பது ‘புண்ய காரியம்’ என்பது அவனுக்குக் கூறப்பட்டது.

“கேவலம் கூலிக்காக, சோற்றுக்காகவாடா, கந்தப்பா நீ வேலை செய்கிறாய்? சகல சித்திகளையும் அருளவல்ல, முருகப்பெருமானுக்கு நீ செய்யும் கைங்கரியம் இது—ஊழியக்காரனல்ல நீ. பக்தன்! தெரிகிறதா! எனவே, கஷ்டத்தைப்