34
காயமும், குதுப்மினாரின் கெம்பீரமும் அஜந்தா சித்திரமும், விஜயநகர சாம்ராஜ்யச் சேதக்குவியலும், மாமல்லபுரத்துச் சிற்பங்களும், குமரிமுனைக் கோலமும் அவன் எங்கே கண்டான்? எங்ஙனம் காண்பான்? இதோ வருகிறார்கள். இந்த எழில் கண்டு மகிழவும், இவை தம் ஏற்றத்தை எடுத்துரைக்கும் பிரமுகர்களுடன் அளவளாவவும், இந்த நாட்டுக் கலை கல்லிலே வடித்துக்காட்டப்பட்டது மட்டுமல்ல, காவலர்களே! கல்லிலே நீவிர்கண்ட குமரியை, அஜந்தா சித்திரத்திலே உங்களை வசீகரித்துக்கொண்ட அந்த வளைவு, குழைவு, நெளிவுகளை, இதோ உங்கள் சிந்தை அணு ஒவ்வொன்றும் சிலிர்த்திடச்செய்யும் வகையில் எடுத்துக்காட்டும், மாலாக்களையும் பாலாக்களையும் குமரிகளையும் தேவிகளையும் காணீர். அவர்கள் கரத்தால் கமலம் காட்டுவர், கண்ணால் கடலைக் காட்டுவர், வெறும் ஆடலல்ல அன்பரீர்! கேவலம் இச்சையைக் கிளறும் அங்க அசைவுகளல்ல! இவை ஆன்ம சுத்திக்காகவே எமது ஆன்றோர் அளித்துச் சென்ற ‘கலோபாசனை’—கலைமூலம் கடவுளைப் பூஜிப்பதாகும்!—என்று கூறுவர்.
இந்த உபசாரம், உலா, பெறுவதற்கு இப்போது தூர இருக்கும் தலைவர்களின் பட்டியல், தற்காலிகமானது, தருகிறேன், பார், கந்தப்பன் கரத்திலே சுளுக்கு இருந்தால் என்ன, சந்தனக்காப்பு சம்பிரமாக நடைபெறுகிறதே அந்தச் சம்பவம் நினைவிற்கு வரும்.
எதியோபிய சக்கிரவர்த்தி
இந்தோனேசியத் தலைவர் டாக்டர் சுகர்ணோ
போலந்து முதலமைச்சர்
தாய்லந்து முதலமைச்சர்
சிரியா நாட்டுத் தலைவர்
இலங்கை முதலமைச்சர்
நேபாள நாட்டு முதலமைச்சர்
இவர்களெல்லாம் ‘விஜயம்’ செய்ய இருக்கிறார்கள்!
விருந்து, வேட்டை, கேளிக்கை, கண்காட்சி, இடையிடையே சர்வதேச நிலைமை பற்றியும் பேசுவர்!
ஒவ்வொருவருக்கும், குடியரசுத் தலைவர் விருந்தளிப்பார். குடியரசுத் தலைவருக்கு அவர்கள் ஒவ்வொருவரும் விருந்-