பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

விட்டு விட்டு ‘ஓஹோ! இவைகளெல்லாம் கட்சிகளே அல்ல’ என்று கூறிவிடுகிறார்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற கதை உண்டல்லவா, அதுபோல, திராவிடமுன்னேற்றக் கழகத்தின் நோக்கத்தில் இன்ன தவறு, போக்கிலே இந்தவிதமான கோளாறு இருக்கிறது என்று எடுத்துக்காட்ட வக்கற்ற இந்த வக்கீல், இந்தக் கழகத்தார், முன்பு வெள்ளையர் ஆட்சியிலே வெண்சாமரம் வீசினவர்கள் என்று குதர்க்கம் பேசிவருகிறார்.

இன்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களில்—முக்கியஸ்தர்களில்—யார் வெள்ளையருக்கு வெண்சாமரம் வீசினவர்கள்—யார் பதவியில் இருந்தவர்கள்—யார் வெள்ளையனிடம் பணம் வாங்கி வேலைபார்த்தவர்கள், என்பதை எடுத்துக் காட்டும்படி, ‘சூரசம்ஹார’க் கோலம் பூண்டு சுற்றி வரும் இந்தச் சுப்பரமணியனாரைக் கேட்கிறேன்.

எப்போது ஜஸ்டிஸ் கட்சி, சேலத்தில் திராவிடர் கழகமாக மாறிற்றோ, அன்றே, களங்கம் துடைக்கப்பட்டது. ‘கழுவிவிட்டதை’க் காங்கிரஸ் தங்கக் கலசத்தில் அல்லவா ஏந்திக்கொண்டது?

நாமறியோமா, நாடு அறியாதா, இந்தச் சேதியை?

வெள்ளையனிடம் சுளைசுளையாகப் பணம் பெற்றுக்கொண்டு, அவன் காலைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டவர்களை, கட்டி அணைத்துக்கொண்டது காங்கிரஸ் என்பதை விளக்க எத்தனை எடுத்துக்காட்டு வேண்டும்! மந்த மதியினரும் இதனை அறிந்துகொள்ள முடியுமே!

அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் யார்? அலிபுரம் சிறையில் அவதிப்பட்ட தேசியத் தொண்டரோ!! வெள்ளையர் ஆட்சியை ஒழித்திட வீரப்போரிட்ட சிதம்பரனாருடன் கூடிச் செக்கிழுத்தவரோ! அன்னிய ஆட்சிக்கு அடங்கிக் கிடக்க மாட்டேன் என்று ஆர்த்தெழுந்த வைக்கம் வீரருக்கு வலதுகரமோ? தேசத்தை அடிமை கொண்டவனுடன் உறவு கொள்ளமாட்டேன் என்று கூறி, ‘உத்யோகத்தை’ உதறி எறிந்த தியாகியோ? நாடு கேட்காதா, நாப்பறை அறையும் இந்த அமைச்சரை? ஐயா! அமைச்சரே! அண்ணாத்துரையும் அவன் சார்ந்துள்ள கழகத்தினரும், வெள்ளையரை ஒழித்திடும் வீரப்போர் புரிந்தவர்களல்லர், எனவே அவர்கள், எமது ஆட்சியிலுள்ள அலங்கோலத்தை எடுத்துக் கூறினால், கேளேன், எவரும்கேளார் என்று விசித்திர வாதம் புரிகிறீரே, இந்த அல்லாடி யார், கூறும் கேட்போம், என்றால், பதில்