பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

களை நையாண்டி செய்வது? பரிசீலனை நடத்தும் உரிமையே உண்டா என்பது சந்தேகம்!

வடநாட்டவர் பொருளாதாரத் துறையிலே படுத்தும் பாடுகளை விளக்குவது பணத்தோட்டம்-ரோமாபுரி ராணிகள் மட்டும் படித்ததாகக் காட்டிக்கொள்ளும் இந்தக் ‘கனம்’ இதைப் படித்ததுண்டா? நாடு, படித்ததுண்டா? நாடு, படித்தது.

தமிழன் ‘கலிங்கம்’ வென்ற தீர இனத்தவன் என்பதைக் கதை வடிவமாக்கியது கலிங்கராணி—அமைச்சர் கண்சிமிட்டிக் கருத்தழித்த ரோமாபுரி ராணிகளைக் கண்டு, சொக்கிப்போய் நின்றுவிட்டார். கலிங்கராணியைக் காண முடியவில்லை, பாபம்!

பொது வாழ்க்கைத் துறையிலே உள்ள போலிகளை அம்பலப்படுத்துவது பார்வதி B. A. பார்த்ததில்லை அமைச்சர்—மற்றும் பல. ரோமாபுரி ராணிகள்—ஓர் இரவு—இந்த இரு ஏடுகள்தான் இவருக்குச் சுவை தந்தனபோலும்.

பேசத் தெரியும், இதுபோன்ற ஏடுகள் தீட்டத் தெரியும் என்று கூறிவிட்டதோடு, நிற்கவில்லை அமைச்சர். ‘நான் செய்யவேண்டிய வேலை’ என்ன என்பதுபற்றியும் கூறுகிறார்.

தம்பி! தேர்தலில் ஈடுபட, நாம் முனைகிறோமல்லவா—பலருக்கு இது பலத்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

நமது பலம் பெரிது என்பதற்காக அல்ல, அவர்களுடைய பலக்குறைவு அவ்வளவு அதிகம்; அதனால்.

பதவி ஆசை பிடித்துக்கொண்டது, அதனால்தான் தேர்தலுக்கு வருகிறார்கள் என்று பதவியில் பிசின்போல் ஒட்டிக்கொண்டுள்ள இந்த உத்தமர்கள் பேசினர்.

அச்சம் காரணமாகவோ, அல்லற்பட வேண்டிவருமே, என்ற சங்கடம் காரணமாகவோ, இவர்கள் இவ்விதம் பேசக்கூடும் என்று எண்ணிக்கொண்ட நான், இரண்டோர் திங்களுக்கு முன்பு மதுரையில் பேசினேன், “ஐயா காங்கிரஸ் நண்பர்களே! ஆயாசப்படாதீர்கள்! எமக்குப் பதவியும் வேண்டாம், இடமும் தேவையில்லை; தேர்தலில் போட்டியிடாதபடி எம்மைத் தடுத்திடும் வாய்ப்புக்கூட நான் தருகிறேன்; இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஆறு ஆயிரம் கோடி செலவழிக்கப்படும் என்கிறீர்கள்; முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேதான் தென்னாடு ஏமாற்றப்பட்டது.