பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

“அண்ணாத்துரை 2000-கோடி ரூபாய் தரப்படவேண்டும் என்று கூறுகிறார்; சரி; 2000-கோடிக்கு, நல்ல திட்டம் தீட்டட்டும், அதை ஒரு அயல் நாட்டு நிபுணர் ஒப்புக்கொள்வாரானால் நான் என் மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்துவிடுகிறேன்—என்று பேசியிருக்கிறார்.”

படித்ததும், தம்பி, எனக்கு முதலில் பரிதாபமாக இருந்தது.

திட்டம் தீட்டினதும், முதலில் களப்பலிபோல, இவருக்குப் பதவி போய்விடுமாமே! அந்தோ, பரிதாபமே, எவ்வளவு சிரமப்பட்டுப் பெற்றார், எத்துணை இராஜதந்திரத்தைக்கொண்டு, ஆபத்தினின்றும் தப்பிப் பிழைத்தார்! கடைசீயில் நம்மாலா இவருடைய பதவிக்கு ‘முடிவு’ ஏற்பட வேண்டும், என்றெல்லாம் எண்ணத் தோன்றிற்று.

நான் 2000 கோடி தென்னாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டது, இவருடைய ‘பதவி’க்கு முடிவு காண அல்ல! அது சாதாரணமாகவே, காலாவதி ஆகிவிடக்கூடியது! இவர், ஏன், பதவியை, இதற்காக இழக்க வேண்டும்! தாராளமாக இருக்கட்டும். அதிலும், எப்போது இவர் திட்டம் திட்டச் சொல்லி என்னை அறைகூவி அழைக்கிறாரோ, இவரேதானே இருந்து அதை நிறைவேற்றித்தரவேண்டும்! ஏன், ஓடிவிடப் பார்க்கிறார்!

ஆனால் உண்மையில் அப்படி ஓடிவிடக் கூடியவரா? செச்சே! அதற்கு வேறு ஆளைப்பாருங்கள்! ஆச்சாரியார் ஆட்சியின்போது, குலக்கல்வித் திட்டத்தை முழு மூச்சாக ஆதரித்தவர், பிறகு அது காமராஜர் ஆட்சியின்போது, குழிதோண்டிப் புதைக்கப்பட்டது கண்டும், கண்ணீர் வடித்துக்துக்கொண்டு, நான் பெற்ற செல்வம் மடிந்ததே என்று ‘மந்திரி’ வேலையை இராஜிநாமாச் செய்வார் என்று பலரும் கூறினர். அவரா இதற்கெல்லாம் இடம் கொடுப்பவர்! ஒட்டிக்கொண்டார்! அவர் புகுத்திய கல்வித் திட்டத்தை ஓட்டினர்—இவர் மட்டும், ஓட்டினவருடன் ஒட்டிக்கொண்டார்; ஓடிவிடவில்லை. பிசின் அவ்வளவு பலம்!!

தேவிகுளம் பீர்மேடு பெறாவிட்டால்...! என்று முழக்கமிட்டார்; நேரு பண்டிதர், ‘மையமைய’ அரைத்தெடுத்த கரியை முகத்தில் பூசினார்; செ! இதுவும் ஒரு பிழைப்பா? சட்ட சபையிலும் மக்களிடமும் மார்தட்டித் தட்டிப் பேசினோம், நமது வார்த்தைக்கு மதிப்பளிக்கவில்லையே டில்லி தர்பார், இந்த அவமானத்தைத் துடைத்துக்கொள்ளவாவது அமைச்சர் பதவியை இராஜிநாமாச் செய்வோம் என்று