பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

இலட்ச இலட்சமாக, இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அபேட்சகர்களாக நின்று, இழந்துவிட்டு ஏங்கப் போகிறார்களோ!

அப்படிப்பட்ட பணப் பெட்டிகளைத் தேடிச் செல்லும் வேளை இது; எனவேதான் அமைச்சர் ஆர்ப்பரிக்கிறார்; அறைகூவல் விடுகிறார்!

மதுரையில் நான் பேசினபோது; இவ்வளவு எளிதில் முளைவிடும் என்று எண்ணவில்லை; இதோ அமைச்சர் ஆர்ப்பரிக்க வேண்டிய நிலைமை வேகமாக வளர்ந்துவிட்டது.

எனவே தம்பி,

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் மோசம் போய்விட்டோம் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திலாவது நாம் சரியான, நியாயம் பெறவேண்டும்.

தி. மு. க. 2000 கோடி ரூபாய் தென்னாட்டுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்று கேட்கிறது.

நாட்டு மக்களே! இதற்கு உங்கள் ஆதரவு தாருங்கள், என்று இல்லந்தோறும் எடுத்துச் சொல்ல, நாள் தவறாமல் பணியாற்று; பார், பதைக்கிறார், கதைக்கிறார், ‘கனம்’. பலன் அளிக்கிறது நமது பிரசாரம் என்பது தெளிவாகிறது, எனவே, புதிய உற்சாகத்துடன் பணிபுரியலாம், தம்பி, அமைச்சரின் ஆவேசப் பேச்சு அதற்கே பயன்பட வேண்டும்.


23–9–1956

அன்பன்,
அண்ணாதுரை