87
தொண்டு, பாட்டாளிகளுக்கான பணிமனை அமைக்கும் தொண்டு-பள்ளிக்கூடம் நிறுவும் தொண்டு, நகராட்சிக்கான நற்றொண்டு—என்று இப்படி வகை வகையாக இருக்கும்—தொடர்ந்து நடந்தேறிவரும். ஒரு காரியம் வெற்றியானால் மற்றொன்று, அது வேறோர் காரியத்தைத் துவக்க வழிகாட்டும்—இப்படி இடைவிடாது தொண்டாற்றிவந்த இளவல் சாமி, காதகரின் கத்தி தன் உயிரைக்குடிக்கும்—அதுவும் விரைவில் — என்று முன் கூட்டியே அறிந்து—அந்தக் கொடுமையான முடிவு வந்து சேருவதற்குள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகத் தொண்டாற்றி, சமூகத்துக்கு நன்மை காணமுடியுமோ அத்தனையையும் விரைந்து செய்துமுடித்து வெற்றி காணவேண்டும் என்று திட்டமிட்டதுபோல, அந்தப் பாண்டிமண்டலப் பாசறைக் காவலன், முன்னேற்றக் கழகத்தின் முன்னணி வீரன், ஆர்வத்தால் உந்தப்பட்டு, செயல், செயல், செயல், என்று ஈடுபட்டிருந்தான்.
நாசகார உலகம் இது! நன்றி கெட்ட நாடு இது! நயவஞ்சகர் கொட்டமடிக்கும் காலம்! நல்லது செய்பவரை நாசமாக்கும் நச்சு நினைப்பினர் உலவும் காடு இது—நாடு அல்ல! நன்றி கூறவேண்டியவர்கள், நட்புக் காட்டவேண்டியவர்கள், பாராட்ட வேண்டியவர்கள், பரிவுகாட்டவேண்டியவர்கள் இவர்களே, நற்றொண்டு ஆற்றும் நல்லோனை, வெட்டுவர், குத்துவர், கொல்வர்—என்று அறிந்ததாலோ என்னமோ, நமது சாமி, அந்த நாசகாலர்கள் தன்மீது பாய்ந்து சாய்க்குமுன்பு, நம்மாலான நல்ல காரியமனைத்தையும் செய்து முடித்துவிடவேண்டும் என்று துடியாய்த் துடித்து செயலில் ஈடுபட்டான். வயது முப்பதாகி ஈராண்டுகளே உருண்டன—சவக்குழி புகுந்துவிட்டார் சாமி. அவர் ஆற்றலால் வீரரான, உறுதியுடன் பாடுபடும் பண்பாளர்களான, ஊருக்கு உழைக்கும் உத்தமர்களான, கட்டிளம் காளைகள் ஆயிரக்கணக்கில் அழுது நிற்கின்றனர்—அந்த ஆற்றல்மிக்கோன் சவக்குழி சேர்ந்துவிட்டான். கொடுமையாளர்களால் கொலை செய்யப்பட்டு, மறைந்தான்—கொப்பளிக்கிறது கண்ணீர்.
“அண்ணா—” என்றனர் அழுகுரலில்—சூழ வந்துநின்ற தோழர்கள்—நான் என்ன சொல்லுவேன்.
நோய்நொடியால் இறந்துபட்டார் என்றால், தக்க மருத்துவம் பார்த்திடவா இயலாது போயிற்றா? என்று கேட்பேன். இறந்துபட்ட சாமிக்கு அறுபது வயது என்றால் பழம் கீழே உதிர்ந்தது, பதறி அழுது என்ன பயன் என்பேன். காட்டு மிருகங்கள் அவர் உடலைக் கிழித்தெறிந்து உயிரைக் குடித்தது