90
சவக்குழி—தம்பி—சாமியின் முயற்சியால் உருவாகி எழிலுடன் விளங்கும் பள்ளிக்கூடத்தின் பக்கத்தில்!!—ஒருபுறம் சாமியின் வெற்றி—மற்றோர்புறம் அவருடைய சவக்குழி—பணியின் உருவம் அந்தப் பள்ளிக்கூடம்—பாதகரின் காதகச் செயலின் உருவாக அமைந்தது சவக்குழி. அதனைக் காண நேரிட்ட கண்கள்—புண்கள். கண்டோம்—நாடு, காடுதான் சிற்சில வேளைகளில்—நல்லாட்சியும் நாகரிக மேம்பாடும், சட்டமும் சமூகக் கட்டுக்கோப்பும் எல்லாம் உள்ளன என்றுதான் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறோம்—ஆனால் இதோ சவக்குழி-படுகொலை செய்யும் பாதகர்கள்—எதிர்த்துப் போரிடவோ, தப்பிப் பிழைக்கவோ முடியாத நிலையில் சிக்கிக்கொண்டவனை வெட்டிக்கொல்லும் வெறியர்கள், உலவுகிறார்கள் என்ற வெட்கக்கேடான நிலையைக் காட்டிக்கொண்டு இருக்கிறது. நெடுஞ்சாலையிலே நின்று நாசகாலர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள்—தடுத்திட ஒருவர் இல்லை—துணைக்கு யாரும் இல்லை. துரைத்தனம் கொடிகட்டி ஆள்கிறது—பல்லாயிரக்கணக்கிலே, ஆடவரும் பெண்டிருமாகக் கூடினர்—அழுத கண்களுடன்—அனுதாபக்கூட்டத்தில். ஆறுதல் அளிக்கவந்தேன்—எனக்கு ஆறுதல் அளியுங்கள்—என்று கேட்டுக் கதறினேன். ஒருவருடைய முகத்திலும் ஈயாடவில்லை.
படுகொலைக்குக் காரணம் என்ன? இந்தப் பயங்கரச் சூழ்நிலைக்குக் காரணம் யாது?—அனைவரும் கேட்கின்றனர்—ஒருவரும் இன்னதுதான் என்று கூறமுடியாமல் திகைக்கின்றனர்.
சோகமும் திகைப்பும் தூத்துக்குடியைக் கப்பிக்கொண்டிருக்கிறது. தமிழகமெங்கும் இதுவே நிலைமையாகிக் கிடக்கிறது.
“போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைக்குக் குந்தகம் ஏதும் விளைந்திடலாகாது, படுகொலை மர்மம் விளக்கப்பட வேண்டும், நாட்டிலே தலைவிரித்தாடும் காட்டுப்போக்கு அடக்கப்பட்டாகவேண்டும்,” என்று தூத்துக்குடி வட்டாரமே கேட்கிறது.
தம்பி! என் வாழ்நாளில் இது போன்றதோர் கொடுமையை நான் கண்டதில்லை. நாங்கள் கூடத்தான் இப்படிப்பட்ட ‘நீசத்தனமான’ காரியத்தைக் கண்டதில்லை என்று அறுபது வயதினரும் கூறுகின்றனர்.
அதிர்ச்சியிலிருந்து நமது தோழர்கள் மீண்டிடவே சில காலம் பிடிக்கும் என்று தோன்றுகிறது—கலம் கவிழ்ந்து,