பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

பாடுபட்டு, நமது பங்கினைச் செலுத்திவிடவேண்டும். நாளை, நாளை என்பது கூடாது! நாளையத்தினம், யார், நம்மைச் ‘சாமி’யாக்கிவிடுவார்களோ, யார் கண்டார்கள் — எனவே இன்றே நாம் நமது கடமையைச் செய்யவேண்டும்.

கண்ணீர் தளும்பும் நிலையில் இருக்கிறோம்—கடமை வீரனைப் பறிகொடுத்ததால். நாம் நமது கடமையை விரைந்து செய்தல் வேண்டும் என்பதைக் காட்டும், கொடிய ஆசானாகிறது, அந்தச் சவக்குழி.


7–10–1956

அன்பன்,
அண்ணாதுரை