பக்கம்:தம்பியின் திறமை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

நல்ல முத்துக்கு அவர்களிடத்திலே உண்மையான அன்பு இருந்ததால் அவன் அவர்களுடைய இழிவுப் பேச்சைப் பொறுமையோடு சகிததுக் கொண்டிருந்தான். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் வீரசிங்கபுரம் என்ற ஒரு நகரத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். அந்த நகரத்தை ஆண்ட அரசனுக்கு ஒரே ஒரு மகளதான் அவள் பெயர் பொற்கொடி. பெயருக்கு ஏற்றவாறு அவள் அழகாக இருந்தாள். ஆனால் அவளுக்குத் தற்பெருமை அதிகம். தன் படிப்பைப் பற்றியும் திறமையைப் பற்றியும் அவள் மிக உயர்வாக எண்ணிக்கொண்டிருந்தாள். அவள் ஒரு வேடிக்கையான தீர்மானம் செய்துகொண்டிருந்தாள். யார் வேண்டுமானாலும் அவளிடம் சென்று எப்படிப் பட்ட பொய்யையும் கட்டுக்கதையையும், வாழ்க்கையிலேயே உண்மையாக நடந்தது என்று கூறலாம். யார் கூறுவதைக் கேட்டு அதைப் பொய் என்று அவள் சொல்கிறாளோ அவரை அவள் மணந்துகொள்வதாக அறிவித்திருந்தாள். ஆனால் இதுவரையிலும் அவளிடத்திலே யாரும் வெற்றியடையவில்லை. யார் எதைச் சொன்னாலும், “நீ கூறுவது உண்மைதான். அது நடந்ததாக நான் நம்புகிறேன்” என்று அவள் பதில் சொல்லுவாள். வந்தவர் ஏமாந்து திரும்புவார்.

இந்த விஷயம் சாமிநாதன் முதலான ஐவருக்கும் தெரிய வந்தது. அவர்களும் பொற்கொடியிடம் சென்று பேசி வெற்றியடையத் தீர்மானித்தார்கள். ஒவ்வொருவனுடைய புத்திக் கூர்மையைச் சோதிக்கவும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது.

முதல் நாள் எல்லோருக்கும் மூத்தவனான சாமிநாதன் பொற்கொடியிடம் தனது வாழ்க்கை அனுபவம் என்று ஒரு கட்டுக் கதை-