பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

க௦க


(நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது)
'மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவர் எல்லாம் நின்நோக் கினரே'

- புறம்: 42 20 - 23.



(கிள்ளி வளவனைக் கோவூர்கிழார் பாடியது
'புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர்'

-புறம்: 46; 3 - 4.



(கிள்ளி வளவனைக் கோவூர் கிழார் பாடியது)
புலவர் பாடும் புகழுடையோர்’

- புறம்: 27: 7.


நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது)

- இனி, புலவர்கள், புரவலர்கள் பலரிடத்தும் பல நிலையிலும் பலவாறு சென்று, தங்கள் தங்கள் வறுமை நிலைகளையும், மனைவி மக்கள் வாழ்கின்ற கொடுமை நிலைகளையும் இழிவுகளையும் தாழ்வுகளையும் பாடி, உணவும் உடையும் உறையுளும் வாழ்வும் பெற்று வாழ்ந்தமை பற்றிய அவலநிலைப் பாடல்கள், சில வருமாறு:

இவ்வகையில் ஒளவையார், அரசர் பலரிடம் சென்று பாடியவை:

ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன்

(அதியமானிடம்)

- புறம்: 101: 1 3.



'அடகின் கண்ணுறை யாக யாம்சில
அரிசி வேண்டினெம் ஆகத் தான்பிற
வரிசை யறிதலில் தன்னும் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே’

(நாஞ்சில் வள்ளுவனிடம்)

-- புறம்: 140: 4 கி.



'வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்