பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௦௩


'பசலை நிலவின் பனிபடு விடியல்
பொருகளிற்று அடிவழி யன்ன என்கை
ஒருகண் மாக்கிணை ஒற்றுபு . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
சென்றுயான் நின்றனென் ஆக அன்றே
ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை
நுண்ணுால் கலிங்கம் உடீஇ உண்ம்எனத்
தேள்கடுப்பு அன்ன நாள்படு தேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ
ஊண்முறை ஈத்தல் அன்றியும் கோன்முறை
விருந்திறை நல்கி யோனே'

(அதியமான் மகன் பொகுட்டெழினியை
- புறம் 392 5, 12-19,


சிரப்பான் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
சுரப்பாடு யான்கேட்பப் பொன்னாடு ஒன்(று) ஈந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்

தாமறிவார் தம்கொடையின் சீர்.
- தனியன்.


இனி, கபிலர் பாடியவை:

'பாரி பாரி யென்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்'

(வேள் பாரியை)
- புறம்: 107; 1 - 2.

'ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே! பெரிதும்
ஈதல் எளிதே' . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே

(மலையமான் திருமுடிக்காரியை)
- புறம்: 121; 1 - 4, 6.

இனி, வன்பரணர் பாடியவை:
‘பீடின் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்றுஎஞ் சிறுசெந் நாவே'

(கண்டீரக்கோப் பெருநள்ளியை)
- புறம் 148; 5 - 7.

'துடியடிக் குழுவிய பிடியிடை மிடைந்த