பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

க௦ரு


தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென் உவந்துநீ

இன்புற விடுதி யாயின் சிறிது

குன்றியும் கொள்வல் கூர்வேல் குமண'

(குமணனை)

- புறம் 159, 20 - 25.

'நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்

மட்டார் மறுகின் முதிரத் தோனே!

செல்குவை யாயின் நல்குவன் பெரிதெனப்

பல்புகழ் நுவலுநர் கூற வல்விரைந்து

உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று

இல்உணாத் துரத்தலின் இல்மறந்து உறையும்

புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்

பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறான்

கூழும் சோறும் கடைஇ ஊழின்

உள்ளில் வறுங்கலத்து இறந்துஅழக் கண்டு

மறப்புலி உரைத்து மதியம் காட்டியும்

நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப்

பொடித்தநின் செவ்வி காட்டெனப் பலவும்

வினவல் ஆனா ளாகி நனவின்

அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்

செல்லாச் செல்வம் மிகுத்தனை வல்லே

விடுதல் வேண்டுவல் அத்தை படுநிரை

நீர்சூழ் நிலவரை உயரநின்

சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே'

(குமணனை)

- புறம் 160. 12 - 20.

'இன்மை துரப்ப இசைதர வந்துநின்

வண்மையில் தொடுத்தஎன் நயந்தனை கேண்மதி

வல்லினும் வல்லே னாயினும் வல்லே

என்னளந்த தறிந்தனை நோக்காது சிறந்த

நின்னளந்து அறிமதி பெரும . . . . . . . . .

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

வானமர் உழந்ததின் தானையும்

சீர்மிகு செல்வமும் ஏத்துகம் பலவே'

(குமணனை)

- புறம் 161: 21-25; 31 - 32.

'எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே