பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௦௬

முன்னுரை 



பழந்துளங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே
குமணனைப் பாடிப் பெற்ற பரிசிலை மனைவிக்குச் சொன்னது

- புறம் 163, 7 - 9.


"எழுவினி நெஞ்சம் செல்கம் யாரோ
பருகு வன்ன வேட்கை யில்வழி
அருகிற் கண்டும் அறியார் போல
அகனக வாரா முகனழி பரிசில்
தாளி லாளர் வேளா ரல்லர்'
இளவெளிமான் சிறுபரிசில் கொடுப்பக் கொள்ளாது கூறியது

- புறம் 207, 1 - 5.


"குன்றும் மலையும் பலபின் னொழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென

காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
தினையனைத் தாயினும் இனிதவர்
துணையளவு அறிந்து நல்கினர் விடினே'
(அதியமான் நெடுமானஞ்சி, காணாது கொடுத்தனுப்பிய
பரிசிலைக் கொள்ளாது கூறியனுப்பியது)

- புறம் : 208: 1-2: 6 - 9

நீடுவாழ்க என்றுயான் நெடுங்கடை குறுகிப்
பாடி நின்ற பசிநாட் கண்ணே
கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்
பொய்த்தல் அறியா உரவோன் . . . . .


நனியுடைப் பரிசில் தருகம்
எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே
(இளவெளிமான் சிறிது கொடுப்பக் கொள்ளாது பாடியது)

- புறம்: 237 : 1 - 4,19 - 26.