௧௧௨
முன்னுரை
யானது பெயர்த்தனென் ஆகத் தானது
சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதுமோர்
பெருங்களிறு நல்கி யோனே'
(சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனர்)
- புறம் 394: 3 - 15.
இனி, சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை மதுரைநக்கீரர் பாடியது:
'தன்கடைத் தோன்றி என்னுற இசைத்தலின்
தீங்குரல் . . . . . . கினரிக்குரல் தடாரியோடு
ஆங்குநின்ற எற்கண்டு
சிறிதுநில்லான் பெரிதும் கூறான்
அருங்கலம் வரவே அருளினன்'
- புறம் 395: 24 - 28.
இனி, ஆயைத் துறையூர் ஓடை கிழார் பாடியது:
'தண்புனல் வாயிற்றுறையூர் முன்றுறை
நுண்பல் மணலினும் ஏத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே'
- புறம்: 136; 25 - 27.
இனி, நாஞ்சில் வள்ளுவனை மருதனிள நாகனார் பாடியது:
'ஆனினம் கலித்த அதர்பல கடந்து
மானினம் கலித்த மலைபின் னொழிய
மீனினம் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண'
- புறம் 138: 1 - 5.
இனி, கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது:
'கொண்பெருங் கானம்
நச்சிச் சென்ற இரவலர்'
- புறம்: 136; 2 - 3.
இனி, பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியது: