பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சிதிதரனார்

௧௧௩


'நின்னசை வேட்கையின் இரவலர் வருவரது
முன்னம் முகத்தின் உணர்ந்தவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே'

--- புறம் 3, 24 - 26.

இனி, பிட்டங்கொற்றனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனாா் பாடியது.

'இன்று செலினும் தருமே சிறுவரை
நின்று செலினும் தருமே பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலும் செலினும் பொய்யா னாகி
யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்'

--- புறம்: 171: 1 - 5.

இனி, சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது:

'யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன
ஊனொலி அரவம் தானும் கேட்கும்
...............................................
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே'
---புறம்: 173: 3 - 4; 11 - 12.

இனி, வல்லார் கிழான் பண்ணனைச் சிறுகருந்தும்பியார் பாடியது:

'உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே சென்மதி நீயே'
--- புறம்: 181, 7 - 8.

இனி, நன்மாறனை வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் பாடியது:

'நீயும்
புகன்ற செல்வமொடு புகழினிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை! யானும்
கேளில் சேஎய் நாட்டின்எந் நாளும்