பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார்

௧௧௭ 


'வள்ளன் மையின்எம் வரைவோர் யாரென
உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா
...............................................
மலர்தார் அண்ணளி நல்லிசை உள்ளி
ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல்
கூர்ந்த வெவ்வம் விட . . . . . . . . . .
...........................................
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்
போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன
அகன்றுமடி கலிங்கம் உடீஇச் செல்வமும்
கேடின்று நல்குமதி பெரும'
--- புறம்: 393: 6-7; 9-11; 16-19,

இனி, வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது:

'உள்ளிலோர்க்கு வலியாகுவன்
கேளிலோர்க்குக் கேளாகுவன்
கழுமிய வென்வேல் வேளே
வளநீர் வாட்டாற்று எழினி யாதன்
............................................
விரிகதிர் வெண்திங்களின்
விளங்கித் தோன்றுகஅவன் கலங்கா நல்லிசை
யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
நிரைசால் நன்கலம் நல்கி
உரைசெலச் சிறக்கஅவன் பாடல்சால் வளனே'
--- புறம்: 396: 10-13; 27 - 31.

இனி, கிள்ளி வளவனை எருக்காட்டூர் தாயங்கண்ணனார் பாடியது:

'தெண்கண் மாக்கினை தெளிர்ப்ப வொற்றி
நெடுங்கடைத் தோன்றி யேனே அதுநயந்து
உள்ளி வந்த பரிசிலன் இவனென
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்
பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
மாரி யன்ன வண்மையிற் சொரிந்து
வேனில் அன்னஎன் வெப்பு நீங்க