பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ககஅ

முன்னுரை


அருங்கலம் நல்கி யோனே'
- புறம்: 397: 10 - 18.
இனி சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது:
'மதியத் தன்னஎன் அரிகுழல் தடாரி
இரவுரை நெடுவா ரிப்ப வட்டித்து
உள்ளி வருநர் கொள்கலன் நிறைப்போய்

தள்ளா நிலையை யாகியர் எமக்கென

என்வரவு அறீஇச் சிறிதிற்குப் பெரிதுவந்து

விரும்பிய முகத்தன் ஆகி எனது அரைத்

துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன்அரைப்

புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ

அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை

நிழல்காண் தேறல் நிறைய வாங்கி

யானுண அருள அன்றியும் தானுண்

மண்டை அகண்ட மான்வறைக் கருனை

கொக்குகிர் நிமிரல் ஒக்கல் ஆர

வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்

விரவுமணி ஒளிர்வரும் அரவுறழ் ஆரமொடு

புரையோன் மேனிப் பூத்தால . . . . . . . . .

உரைசெல அருளி யோனே
- புறம் 398: 12 - 29.


இனி, தாமான் தோன்றிக்கோனை ஐயூர் முடவனார் பாடியது:
'காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்

கிள்ளி வளவன் உள்ளி யவற்படர்தும்

..............................................


பகடே யத்தை யான் வேண்டி வந் ததுவென


..............................................

ஆன்று விட்டனன் அத்தை விசும்பின்

மீன்பூத் தன்ன வுருவப் பன்னிரை

ஊர்தியொடு நல்கி யோனே'
- புறம்: 399; 12 - 13; 28, 30 - 33.


இனி கோப்பெருஞ் சோழனைப் பொத்தியார் பாடியது:

'பாடுநர்க் கீத்த பல்புகழன்'