பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

க௨௩


10) புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும். 183

11) ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. - 215.

12) பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடைய யான்கண் படின். - 216.

13) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்ததை யான்கண் படின். - 217

14) வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து. – 221.

15) அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. — 236.

- என்றிவ்வாறு, அறக்கூறுகளை உணர்வளவானும் உடைமையளவானும், செய்தக்கவை இவை, செயத் தகாதன இவை என்றெல்லாம் பகுத்தும் வகுத்தும் தொகுத்தும் கூறுதலை இந்நூல் முழுவதும் காணலாகும் என்க. இவை அனைத்தும் பொதுமை நோக்கிலும் பொதுவுடைமை நோக்கிலுமே, சாதிச் சார்பும், மதச் சார்பும், இனச்சார்பும், நிலச்சார்பும் இன்றி, மக்கள் குலம் அனைத்திற்குமே கூறப்பெற்றுள்ளதை ஆழ்ந்து நோக்குதல் வேண்டும். இந்நிலை தமிழியல் அறத்தை முற்றும் வடிவப்படுத்தியதாகும். மற்று ஆரியவியல் தர்மமோ, நிறச்சார்பும் அஃதாவது வரணச் சார்பும் சாதிச் சார்பும் மதச்சார்பும் இனச்சார்பும் நிலச்சார்புமே கலந்து கூறப்பெறுவதால் அந்நிலை பொதுமைக்கும் பொதுவுடைமைக்கும் எள்ளத்துணையும் பொருந்தி வராதென்று புறம் விடுக்கப்படுவதே ஆகும், என்க.

5. திருவள்ளுவரின் தமிழியல் பார்வையும்

ஆரியவியல் எதிர்ப்பும் தவிர்ப்பும்:

பொதுவாகவே ஒரு நூல் தோன்றுவதற்கான அடிப்படைக் காரணங்கள் சில உண்டு. அவை,

1) அது தோன்றுகின்ற காலச்சூழல்;