பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

கஉரு


அக்கால் வாழ்ந்திருந்த அரசர்கள் பலரும் அறிஞர்கள் பலரும், இக்கால் போலவே, அவற்றில் கருத்துச் செலுத்தாதவர்களாகி, உருமாறி வந்த ஆரியவியலின் புதுவரவிற்குத் தாங்களும் மதிமயங்கி வழிவிட்டவர்களாக, எவ்வகை எதிர்ப்பும் காட்டாதவர்களாகத் தங்கள் வாழ்க்கையே நோக்கமென அடிசாய்ந்து வந்தனர். அவர்களுள் திருவள்ளுவர் போலும் புலவர் பெருமக்கள் ஓரிருவரும்கூட நேரடியாக எதிர்ப்புக் காட்டமுடியாதவர்களாகி, வெளிப்படையாகக் கருத்துக்கூற இயலாதவர்களாகக் கையற்று நின்றிருத்தல் வேண்டும்.

இந்நிலை, வலிந்த புறவினத்தாக்கம், ஏற்கனவே செழிப்புற்றிருந்த, பண்பட்ட ஒர் இனத்தின் மேல் நிகழும் பொழுது இயல்பாக ஏற்படுகின்ற ஓர் இழிநிலையாகும். அத்தாக்கத்தின் விளைவுகள் அறியப்பெறும் வரை, அதற்குத் தோன்றும் எதிர்ப்புகள் குறைவாகவேதாம் இருக்கும். எப்பொழுதும் ஆற்றின் போக்குக்கு இயைபாகவே ஓடக்காரர்கள் ஒடங்களைச் செலுத்த விரும்புவது போலவும், அவ்வாற்றை எதிர்த்துப்போவார் மிகமிகக் குறைவாகவே இருப்பது போலவும்தான், ஒர் இனக் கூறுகளின் மேல் ஏற்படும் தாக்க நிலைக்குள்ள எதிர்நிலைப் போக்கும் இருக்கும் என்பது, மாந்த இயங்கியலும், மாந்த மனவியலும் ஆகும். தாக்கமுறும் இனத்தில் உள்ள பெரும்பாலார்கள் அத்தாக்கங்களை எதிர்த்துப் போவதால் ஏற்படும் கடும் விளைவுகளுக்கும் வாழ்வியல் இடையூறுகளுக்கும் அஞ்சி, அவற்றுக்கு இயைபாகவே ஒட்ட ஒழுகவே செய்வர் என்பதே உலகியலாக உள்ளது. மிகச் சிறந்த உலகியல், மாந்த மனவியல் பேராசிரியராகிய திருவள்ளுவப் பேராசானும்,

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

– 140.


செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்

– 6:37.

- என்று இவ்வுலக நடைமுறைகளைப் பொது அறிவாக எடுத்துக் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, அவ்வாரியவியற் கருத்துகள் பரவுகின்ற நிலையில், அக்கால் உள்ள அறிஞர்கள் பலரும் வாளா அமைந்திருக்கவும், அவற்றோடு மாறுபடாமல் இயைந்து சென்று, தங்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஊறு நேராமல் தங்களைக் காத்துக்கொள்ளவுமே விரும்பியிருந்திருப்பர் என்க.

ஆனால், இந்நிலைகளைப் பொறுத்துக் கொள்ளாத இயல்பான நல்லுணர்வும், தன்மானமும், தமிழியல் அறிவும், மிகச்சிறந்த பொது அறவுணர்வும் அளவற்ற புலமையும் கொண்டிருந்த திருவள்ளுவப்