பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

௧௩௧


'வேதங்களை மறுக்கக் கூடாது'

- மனு: 12; 110.

'வேதமறிந்த பிராமணன் சொல்வதே தர்மம். வேதமறியாத பத்தாயிரம் பேர் கூடிச் சொன்னாலும் தர்மம் ஆகாது'

- மனு: 12; 113.

மனு முதலிய தர்மங்களில் சொல்லப்பட்டவற்றை பிசகாமல் பின்பற்றுபவர்களே துறக்கம்,சொர்க்கம் அடைகிறார்கள்.

- மனு: 12; 116.

இக்கருத்துகளின் வலிவைக் கூர்மழுக்கிப் பொதுநிலையாகத் திருக்குறளில் மறுத்தும் எதிர்த்தும் கூறப்பெற்ற கருத்துகள் வருமாறு: (ஆரிய தர்மம் அடியூன்றிப் பரந்து நின்ற அக்காலத்து இதுபோலும் மறைமுகமாக வன்றி, நேரிடையான வேதவதிர்ப்புக் கருத்துகளை எவராலும் கூறியிருத்தல் இயலாது என்பதை ஆராய்ந்து உணர்க)

'சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

 வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
- 18.

'தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்

 வானம் வழங்கா தெனின்
– 19.

- இவை தேவர்களால் மழை பொழியும் என்பதை மறுத்தது.

'ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

 வேண்டும் பனுவல் துணிவு'
– 21
.

'அந்தணர் என்போர் அறவோர்மற் றெல்வுயிர்க்கும்

 செந்தண்மை பூண்டொழுக லான்'
– 30.

-இவை பிராணமர்களே உயர்ந்தவர்கள் என்பதை மறுத்து, ஒழுக்கம் உடையவனும், எல்லா உயிர்களிடத்தும் உண்மையான, பொதுவான அன்பும், நேர்மையும், இரக்கமும் காட்டுபவனே உயர்ந்தவன் என்றது.

'தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

 பெய்யெனப் பெய்யும் மழை'
– 55

- இது தமிழ்ப் பெண்டிர், தம் கொழுநரைத் தவிர, வேறு உய குலத்தவர்களையோ, மற்றும் தெய்வங்களையோகூட மதியார், என்றது. (பிராமணர்களுக்குத் தமிழ (சூத்திர)ப் பெண்டிர் வைப்பாட்டிகளாக இருக்க வேண்டும் என்னும் ஆரிய ஒழுக்கத்தைத் தமிழ ஒழுக்கத்தால் கண்டித்து மறுத்தது. இந்த வகையாலன்றி, வேறு எந்த வகையாலும் அக்கருத்து மறுத்தற்கியலாது, என்க. அக்காலத்துப் பேரரசர்களும் வேளிர்களும் செல்வர்களும் தெய்வ பத்தியால் தம்தம் மனைவியரையே ஆரியப்