பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

க௩௫'கதை(6) என்பவள் வயிற்றில், ஒருதலையுடைய நாகங்களும் பலவகைப் பாம்புகளும், தேள், பூரான், கரமண்டலி முதலிய அனைத்து நஞ்சுள்ள பிறவிகளும் பிறந்தன'

'கத்துரு(7) என்பவள் வயிற்றில், ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷனும், தட்சன், வாசுகி, கார்க்கோடகன் முதலிய எண்ணற்ற நாகங்களும் பிறந்தார்கள்'

'தாம்பரை(8) என்பவள் வயிற்றில் ஊர்க்குருவி, உள்ளான், கோழி, கொக்கு முதலிய பறவையினங்கள் பிறந்தன'

'விநுதை(9) என்பவள் வயிற்றில் அருணன், கருடன், பருந்து, கூகை முதலியனவும், வான்இடி, மின்னல் முதலியனவும் பிறந்தன'

'குரோதவசை(10) என்பவள் வயிற்றில் கழுதை, ஒட்டகம், மரை, மான், புலி, சிறுத்தை முதலிய கொடிய விலங்குகள் பிறந்தன'

'இளை11)என்பவள் வயிற்றில் மீன்கள், ஆமைகள், தவளைகள், சுரா, திமிங்கலம் முதலிய நீர்வாழும் உயிரிகள் அனைத்தும் பிறந்தன'

'கதை(12) என்பவள் வயிற்றில் மரம்,செடி, கொடி, புல், பூண்டு ஆகிய பல்லாயிரம் பயிரினங்கள் எல்லாம் பிறந்தன'

'அநாயு(13) என்பவளிடம் சித்திரையும்'

'பிரதை(14) யிடம் காந்தர்வர்களும்',

'முனி(15)யிடம் அப்ஸரஸ்களும், பிறந்தனர்.'

– இனி, இவர்கள் அல்லாமல், காசிபர் மேலும்,

'காலை' என்பவளை மணந்து காலகேயர், பர்வதன் என்னும் தேவரிஷி,

'புலோமை' என்பவளை மணந்து, புலோமர், விபாண்டகன் என்னும் பிரம்மரிஷி,

'மாயை என்பவளை மணந்து, சூரபத்மன் முதலியவரையும்,

'ஊர்வசியைப் புணர்ந்து வசிஷ்டமுனிவரையும் பிறப்பித்தார்.'

– 'அவர் மேலும் பூமாதேவியை மணந்து, பூமியில் உள்ள பிற அனைத்தையும் பிறப்பித்தார்.

காசிபரால் இவையனைத்தும் பிறப்பிக்கப் பெற்றதால் இவை வாழுமிடமாகிய பூமிக்கு காசினி என்று பெயர் உண்டாயிற்று' – என்பர்.

– இவ்வாறான பொய்ம்மையும் புலைமையும் பொருந்தாமையும் நிறந்த ஆரியவியலின் படைப்புக் கொள்கையையும்