௧௩௬
முன்னுரை
பிறப்பியல் கோட்பாட்டையும் திருவள்ளுவர் அடியோடு பின் வருமாறு மறுத்துரைப்பார்.
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு:— 1.
'விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது- 16.
– 20.
- முதலிய கருத்துகளால் அவர்தம் படைப்புக் கொள்கையையும்,
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்– 972.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்— 973.
ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்– 133.
மறப்பினும் ஒத்துக் கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்– 134.
'அந்தணர் என்போர் அறவோர்,மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்- 30.
'செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்’ –26.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்'- 505,
'இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்'– 698.
'மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு'- 409.
-என்னும் இவை போன்ற நூற்றுக் கணக்கான கூற்றுகளால் ஆரியவியலின் பிறப்பியல் கோட்பாட்டையும் வருணாச்ரமக் கொள்கையையும் அழுத்தம் திருத்தமாக அடியோடு தகர்த்து எறிகிறார், என்க. எசுர் வேதத்தில் மக்களுக்குள் நூற்றுத் தொண்ணுற்றாறு பிரிவுகள் உள்ளன என்று கூறப்பெற்றுள்ளது. இனி, வர்ணாச்ரமக் கோட்பாட்டின்படி ஆரியவியலில்