பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௧௨

முன்னுரை


அதுவும் மிக எளிதே இயலுவதாகிய கணிப்பொறி நிறை காலக்கட்டத்தில் நாம் வாழுகின்றோம்!

அத்தொடு மட்டுமன்று! . . . அமெரிக்க நாட்டின் ஒரிடத்தில் இருந்துகொண்டு, ஆங்கிலத்தில் பேசினால் - சப்பாண் நாட்டின் ஒரு கணிப்பொறி முன்னர் அதற்குரிய மொழிபெயர்ப்பையே இன்னொருவர் கேட்கலாம்! அப் பேச்சின் மொழிபெயர்ப்பையே எழுத்துப் பதிவாகவும் பெறலாம்! உலகத்தின் ஒரு மூலையில் எவரோ ஒருவர் பேசுவதையே - பிறிதொருமூலையில் வாழும் நம்முன் எழுத்துருவிற் பார்வைக்குட்படுத்தலாகும் கருவிகள் குவிந்துகிடக்கும் பரும்பயன் நிறைந்துள்ள பாரிய அறிவுவளக்காலத்தில் நாம் வாழுகின்றோம்!

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் - இத் தமிழகத்தில் எழுதுவதற்கு உரிய வசதிப்பாடு எவ்வாறு இருந்திருக்கும்?! . . . . சற்று எண்ணிப்பாருங்கள்! . . . . முற்ற முற்றி முதிர்ந்ததாகத் தெரிந்து பறித்த பனையோலையே தாள்! . . . இரும்புக் கூராணியே - எழுதுவதற்குரிய மாழைக் குச்சி! . . அதுவே, எழுத்தாணி! இரண்டு மட்டுந்தாம் அன்றைய எழுதுபொருள்கள்! தூரிகையைக் கொண்டு துணியில் எழுதுவதோ, அன்று மிகமிக அரிதாயிருந்திருக்கும்! அதுவும், அரசுச்சார்புச் செய்திகளுக்கோ- தூதுச்செலவு நிலைகளுக்கோ ஒரொருகால் பயன்படுத்தங் கொண்டிருக்கலாம்! எழுதுவதற்குப் பயன்படுபொருள்களாயிருந்த ஒலை - ஆணி என்னும் ஈரெழுது பொருள்களைக் கொண்டுதாம் நூல்கள் யாவும் எழுதப்பெற்றன! படியெடுக்கப்பெற்றன! அவைதாம் படிக்கவெனப் பயன்பரப்பின! [ஒலைகளின் தொகுதிக்குரிய பெயர்தான் - சுவடி என்பது! பொத்திய (சேர்த்துத் தொகுத்த) எழுத்தேட்டுக் கற்றையாகிய தொகுதியே, பொத்தகம் என்பது! அப் பொத்தகமே - இன்று புத்தகம் ஆனது! நுண்மையான அறிவுக் கருத்துகளடங்கிய பொத்தகமே சுவடியே “நூல்” என்று, நுவலப்பெற்றது! (ஒ.நோ. “நுண்ணிய நூல் . . ” (307) (நுல்> நுண்> நுண்+மை> நுண்மை, நுல் > நூல் .]

இந் நூல்களையெல்லாம் அன்று தோற்றுவதற்கு - நம் புலவர் பெருமக்கள் எவ்வளவு அரும்பாடு நிகழ்த்தியிருக்க வேண்டும்?! . . . . ஆயிரமாயிரமாகத் தோற்றங்கொண்ட அன்றைய அரும்பெரு நூல்களெல்லாம் இன்று எங்கே? கடைக்கழக நூல்களாகத் தப்பிநின்று நமக்கு இன்றைக்குப் பயன்படுகின்ற -நம்மை நாம் மீட்டுக்கொள்ளுவதற்குரிய வகையில் உள்ளீடான வரலாற்று