பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

௧௩௭


கற்பிக்கப்பெற்ற தொழிலமைப்பு வேறுபாடுகள் பன்னூற்றுக் கணக்கானவை ஆகும், அவற்றுள் கூறப்பெற்றுள்ள சிற்சில தொழிலமைப்பு வேறுபாடுகளைக் காண்க:

'மனு வேதங்களை உணர்ந்த பிரம்ம ஞானி. எனவே அவரால் எந்தச் சாதியார்க்கு எந்தத் தொழில் விதிக்கப்பட்டதோ அது வேத சம்மதமாகும்.'

- மனு - 2 : 7.

'அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன் முகம், தோள், துடை, பாதம் இவற்றினின்று உண்டான பிராமண, ௯த்திாிய, வைசிய, சூத்திர வருணத்தாா்க்கு, இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்'.

- மனு - 1 87.

'வேதஞானம், வேதம் ஓதல், ஓதுவித்தல், வேள்விபுரிதல், புரிவித்தல், செல்வம் ஈதல், ஏற்றல் - ஆகியவை பிராமணனுடைய பணி'

- மனு: 1 - 88, 93, 94,95, 96, 98, 99, 100.

'உலகை ஆளுதல், மக்களைக் காத்தல், கொடை, வேள்வி செய்வித்தல், வேதம் பயிற்றுவித்தல், எதனாலும் ஈர்க்கப் படாத திடமனத்தினனாய் இருத்தல் - ஆகியவை கூத்திரியன் தொழில்'.

- மனு: 1 - 89.

'செல்வம் தேடுதல், கடல், மலை, கனிப்பொருள், விளைபொருள் வணிகம் செய்தல், ஆநிரைகாத்தல், பயிர்த்தொழில், வட்டித் தொழில் செய்தல் ஆகியவை வைசிகன் தொழில்'.

- மனு: 1 - 90.

'பிராமணர், ௯த்திரியர், வைசியர் ஆகிய மூவர்க்கும் மனம் கோணாமல், பொறாமையின்றி அவர்களின் விருப்பப்படி தொண்டு செய்தல் சூத்திரன் தொழில்'

- மனு: 1 - 91.

'தன் சாதித் தொழில் விட்டு வேறு சாதித் தொழிலைச் செய்பவனை அரசன் இரை விட்டே ஓட்டவேண்டியது'

- மனு: 9 - 225.

'பிராமணர்க்குப் பணிவிடை புரிவதே சூத்திரர் தர்மம்.

சூத்திரர்க்கு அதுவே மோட்சப் பாதை'

- மனு: 9 - 334

.