பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௩௯


எழுவாரை எல்லாம் பொறுத்து'
- 1032.

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்'
– 1033.

'பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழல் அவர்'.
— 1034.

'உழவினார் கைம்மடங்கின் இல்லை; விழைவதுாஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை'
– 1036.
- என்னும் குறள் கருத்துகளை ஓர்மின்!

மேலும் உலகில் உள்ள வேறு எத்தொழிலையும் திருக்குறளில் சுட்டிச் சொல்லாமலும், போற்றியுரைக்காமலும், உழவுத்தொழில் ஒன்றுக்கே தனிஓர் அதிகாரம் வகுத்தளித்ததையும், அதில் அத்தொழிலையே போற்றிச் சொல்லியதையும் ஆழமாக எண்ணி, அக் கருத்துகளால் உழவுத்தொழிலை இழிவுபடுத்தும் ஆரியவியலை மிகுவாகக் கண்டிப்பதையும் எண்ணிப் பார்க்கவும்.

இனி, மனுநூலில் உழவியலைக் கண்டித்தும் இழிவுபடுத்தியும் கூறிய கூற்றில், அத்தொழிலால் சிற்றுயிர்களைக் கொல்லுதல் நிலை ஏற்படுகிறதாகக் குறிப்பிட்டுள்ளதற்கு நேர் மாறாக, மற்றுமுள்ள பேருயிர்களைக் கொல்வதும், அவற்றை உண்பதில் தவறில்லை என்று கூறப்பட்டிருப்பதும் கவனிக்கத் தக்கன. அவற்றையும் இங்கு எடுத்துக் காட்டுவோம்.

'பிராமணன் மீனை மட்டும் விலக்கி மாமிசம் உண்ணலாம்'

- (மனு: 5 - 15, 17)

- இங்கு வடவிந்தியாவில் சில பகுதிகளிலும், காசுமீரிலும் உள்ள பிராமணர்கள் மீனையும் உண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

'பிராமணன் உணவுக்காகவே எல்லா உயிர்களும் பிரமனால் படைக்கப்பட்டன'.

முதல் - மனு: 5 - 29, முதல் 32 வரை 36, 37.

'யக்கியத்திற்காக மிருகக் கொலை செய்வது பாவமாகாது'

- மனு: 5 - 39 முதல் 42 வரை 44.

"உயிர் வாழ்வதற்குப் புசிக்கத்தக்க பிராணிகளை நாள்தோறும் தின்று புசித்தாலும் தோஷமில்லை; ஜீவனுக்கு ஆகாரமாகவே புசிக்கத்தக்க பிராணிகள் பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் யாகம் செய்து மாமிசத்தைப் புசித்தால் தேவகாரியம்; மாமிசத்தைத் தேவர்களுக்கும்